கடைசி நேரத்தில் முன்னிலையான வழக்கறிஞர்

கடைசி நேரத்தில் முன்னிலையான வழக்கறிஞர்

1 mins read
d1ff3436-db46-4003-b99f-a2264250bc9f
-

கொவிட்-19 விதி­மு­றை­களை மீறி­யது தொடர்­பாக 21 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கும் 54 வயது பூன் சியூ யோக், அவற்றை ஒப்­புக்­கொள்ள இருந்­த­போது அவ­ரைப் பிர­தி­நி­திக்க வழக்­க­றி­ஞர் திரு ஏமஸ் சாய் கடைசி நேரத்­தில் நீதி­மன்­றத்­துக்கு நேற்று வந்­தார்.

நீதி­மன்­றத்தை அடைந்த திரு சாய், பூனி­டம் பேசி அவ­ரைப்

பிர­தி­நி­திப்­பதை உறுதி செய்­து­கொண்­டார்.

பூனின் குடும்­பத்­தார் தமது சேவை­களை நாடி­ய­தாக திரு சாய் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார். பூனி­டம் இன்று தனிப்­பட்ட முறை­யில் பேச அவர் ஏற்­பாடு செய்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

வழக்கை இரண்­டி­லி­ருந்து மூன்று வாரங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கும்­படி நீதி­மன்­றத்தை திரு சாய் கேட்­டுக்­கொண்­டார்.

வழக்கு விசா­ர­ணைக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டல் இன்று நடை­

பெ­றும் என்று மாவட்ட நீதி­பதி கெரல் லிங் தெரி­வித்­தார்.

பூன்னை திரு சாய் பிணை­யில் எடுக்க முயன்­றார். ஆனால் பிணை மனுவை நீதி­பதி லிங் நிரா­க­ரித்­து­விட்­டார்.