48வது நிபுணத்துவ ஆயுதப் படை பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு அணி
வகுப்பு இம்மாதம் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் 1,139 நிபுணத்துவப் பயிற்சி அதிகாரிகளும் ராணுவ நிபுணர்களும் பயிற்சியை முடித்து பட்டம் பெறுவர். அவர்களில் முன்னாள் தாதியான 30 வயது
ஐஸ்வர்யா நேதாஜியும் ஒருவர். தனது படைப்பிரிவில் அவர்தான் ஒரே ஒரு பெண். தனிநபர் உடற்தகுதிச் சோதனையில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கத்தை அவர் பெற்றார். சிங்கப்பூர் ஆயுதப் படையில் மருத்துவ நிபுணராக ஐஸ்வர்யா சேர்ந்துள்ளார்.
"எனது திறமையைக் காட்ட ஆயுதப் படைதான் சரியான இடம்," என்று நம்பிக்கையுடன் அவர் தெரிவித்தார்.
ஐஸ்வர்யா நேதாஜியுடன் அவரது தாயார்.
படம்: தற்காப்பு அமைச்சு

