தொற்றுக் குழுமம் இருப்பினும் சாஃப்ரா தெம்பனிஸ் செயல்படும்

1 mins read
3695b9fe-762d-4fab-a6ee-59ac31c7486a
-

சாஃப்ரா தெம்­ப­னி­சில் புதிய தொற்­றுக்­கு­ழு­மம் உரு­வா­ன­போ­தும் அது மூடப்­ப­டா­மல் தொடர்ந்து செயல்­படும். நேற்று முன்­தின நில­வ­ரப்­படி அங்­குள்ள தொற்­றுக் குழு­மத்­தில் ஒன்­பது பேருக்கு தொற்று ஏற்­பட்­டி­ருந்­தது.

தொற்­றுள்ள ஆறு பேர், கடை­சி­யாக கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வந்­து­சென்­ற­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு விடுத்த அறிக்­கை­யில் சாஃப்ரா கூறி­யது.

அவர்­க­ளு­டன் அணுக்­க­மான தொடர்­பில் இருந்த அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப் பட்­டு­விட்­ட­னர்.

மேலும், தொற்று ஏற்­பட்ட நபர்­கள் சென்ற அனைத்து இடங்­களில் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் வழி­காட்­டி­க­ளின்­படி கிரு­மி­நா­சினி தெளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சாஃப்ரா கூறி­யது.

அனைத்து சாஃப்ரா வளா­கங்­க­ளி­லும் பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­கள் தொட­ரும் என்­றும் அமைப்பு கூறி­யது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் இரு­வ­ரா­கத் தான் அங்கு செல்ல முடி­யும்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள், அதி­க­பட்­சம் ஐந்து பேர் கொண்ட குழுக்­களில் அங்­குள்ள உணவு பான கடை­களில் அமர்ந்து உண்­ண­லாம்.

அவர்­கள் முகக் கவ­சத்­தைக் கழற்­றி­விட்டு பூப்­பந்து, ஸ்கு­வாஷ் போன்ற சில உட்­புற விளை­யாட்­டு­களில் ஈடு­ப­ட­லாம் என்று சஃப்ரா தெரி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக் கொண்­டோருக்கும் போடா­தோருக்­கும் சாஃப்ரா கடைப்­பி­டிக்­கும் வெவ்­வேறு நடை­மு­றை­களில் இவை அடங்­கும் என்று அமைப்­பின் இணை­யத்­த­ள­த்­தில் கூறப்பட்டது.