செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
944e0e4b-a701-47be-b1f0-56263b3e3a69
-

விருந்தினர்களை ஈர்க்க ஷங்ரிலா ராசா செந்தோசா இலவச பரிசோதனை

ஷங்ரிலா ராசா செந்தோசா ஹோட்டலில் தங்கும் விருந்தினர்கள் இன்னமும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு நிகழ்வுக்கு முந்தைய கிருமிப் பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள ஹோட்டல் நிர்வாகம் முன்வந்துள்ளது.

அங்குள்ள உணவு பானக் கடைகள் போன்ற வசதிகளை விருந்தினர்கள் பயன்படுத்த அது வகைசெய்யும்.

நேற்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை இலவசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சின் அனுமதிபெற்ற நிறுவனம் அவற்றை மேற்கொள்ளும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் கூறியது.

நிகழ்வுக்கு முந்தைய கிருமிப் பரிசோதனையில் தொற்றில்லை என்று சான்று காட்டினால்தான் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாத விருந்தினர்கள் சுற்றுலா தலத்தின் வசதிகளைப் பயன்படுத்த முடியும்.

இலவசப் பரிசோதனைகளை வழங்குவதன் வழி ஹோட்டலில் தங்கும் எல்லா விருந்தினர்களுக்கும் அதன் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு குறித்த நிம்மதியும் உறுதியும் வழங்க நம்பிக்கை கொண்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியது.

சின் சுவீ ரோட்­டில் உள்ள பாலர் பள்ளியில் தொற்­றுக் குழு­மம்

எண் 54, சின் சுவீ ரோட்­டில் உள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் ­பள்­ளி­யில் நேற்று முன்­தி­னம் புதிய தொற்­றுக்­கு­ழு­மம் அறி­விக்­கப்­பட்­டது. அந்­தத் தொற்­றுக்­கு­ழு­மத்­தில் புதி­தாக ஐந்து பேருக்கு கிரு­மித் தொற்று ஏற்பட்டதை சுகாதார அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரிவித்தது.

அதன் வழி, தொற்­றுக் குழு­மத்­தில் மொத்தம் ஆறு பேருக்­குத் தொற்று உள்ளதாக அமைச்சு கூறி­யது.

'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் ­பள்­ளி­யில் கிருமி நாசினி தெளிக்­கப்­பட்டு விட்­ட­தற்­கான சான்­றி­தழ் அதன் வெளியே நேற்று ஒட்­டப்­பட்­டி­ருந்­தது.

இரண்டு நாட்­களில் தொற்­றுக் குழு­மம் ஏற்­பட்­டுள்ள இரண்­டா­வது பாலர்­பள்ளி அது.

கிரேத்தா ஆயர் சமூக நிலை­யத்­தில் உள்ள 'சூப்­பர்­லேண்ட்' பாலர் பள்­ளி­யில் தொற்­றுக் குழு­மம் உரு­வா­ன­தாக கடந்த 11ஆம் தேதி தெரி­விக்­கப்­பட்­டது. ஐந்து பாலர்களுக்கும் பள்ளி ஊழி­யர் ஒரு­வ­ருக்­கும் தொற்று கண்­டது. அங்கு முன்­னெச்­செ­ரிக்கையாக எல்லா ஊழி­யர் ­களுக்கும் பாலர்­க­ளுக்­கும் கிரு­மிப் பரி­சோ­த­னை­கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பள்ளி நிர்­வா­கம் முன்னதாக கூறியது.