கம்போங் கிளாம் மெய்நிகர் உலா

கம்போங் கிளாம் மெய்நிகர் உலா

1 mins read
fb7c0800-0fe3-4699-b8b8-d2e4f74fdd46
தேசிய மரபுடைமைக் கழகம் உருவாக்கி வரும் 'கம்போங் கிளாம்' மின்னிலக்க வடிவம் படம்: தேசிய மரபுடைமைக் கழகம் -

கம்போங் கிளாம் பகுதியை மின்­னி­லக்கத்தில் உரு­வாக்கி வரு­கிறது தேசிய மர­பு­டை­மைக் கழ­கம். இனிமேல் கம்போங் கிளாமை மக்­கள் மின்னிலக்க வடிவத்திலும் கண்டு ரசிக்­க­லாம். இத்திட்டத்தில் பொது மக்­க­ளின் படைப்­பாற்­றல் மிக்க பங்­க­ளிப்பையும் கழகம் வரவேற்கிறது.

இவ்­வாண்­டி­று­தில் தயா­ரா­க உள்ள மின்னிலக்க வடிவம், மக்­க­ளின் நேரடி அனு­ப­வத்­திற்­கும் மெய்­நி­கர் அனு­ப­வத்­திற்­கும் ஒரு பால­மாய் விளங்கி அவர்­க­ளைக் கம்போங் கிளா­முக்கு நேர­டி­யா­கவோ மெய்­நி­கர் மூல­மா­கவோ கொண்டு செல்ல ஊக்­கு­விக்­கும் என தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் எதிர்­பார்க்­கிறது.

இம்­மாத இறுதி வரை மின்­னி­லக்­கத் திட்­டப் பரிந்­து­ரை­களை கழகம் ஏற்­றுக்­கொள்­ளும்.

ஆர்வமுள்­ளோர் தங்­க­ளது திட்­டங்­களை DigiMuse@nhb.gov.sg என்ற முக­வ­ரிக்கு மின்­னஞ்­சல் மூலம் ஆகஸ்ட் 31ஆம் தேதி மதி­யம் 4 மணிக்­குள் அனுப்பி வைக்­க­லாம். தேர்­வுசெய்­யப்­பட்ட திட்­டங்­க­ளுக்கு $25,000 வரை நிதி வழங்­கப்­ப­டலாம்.

மேல் விவ­ரங்­க­ளுக்­குத் தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் இணை­யப் பக்­கத்தை அணு­க­லாம்.