பெற்றோருடன் பேசிய குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்

2 mins read
35b4f2da-153a-4d3d-9cc1-dfe5b11f2443
-

ரிவர் வேலி ஹை பள்­ளி­யில் சக மாண­வ­ரைக் கொன்­ற­தா­கக் குற்றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள 16 வயது மாண­வர், தடுப்­புக் காவ­லில் வைக்கப்­பட்ட பிறகு மெய்நிகர் வாயிலாக முதன்­மு­றை­யா­கத் தனது பெற்­றோ­ரு­டன் பேசி­யி­ருக்­கி­றார்.

அதற்குக் காவல்துறையினர் ஏற்பாடு செய்ததாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று மாண­வர் மெய்­நி­கர் வாயி­லாக நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தப்­பட்­டார்.

அப்­போது மாணவரின் நலனை விசா­ரிப்பதற்கு வகை­செய்ய ஐந்து நிமி­டங்­க­ளுக்கு பெற்­றோரு­டன் பேச அனு­மதி வழங்­கு­மாறு அவரின் வழக்­க­றி­ஞர்­கள் கோரிக்கை விடுத்­த­னர். அதற்கு அர­சாங்­கத் தரப்பு முதலில் எதிர்ப்பு தெரி­வித்­தது. மாண­வர் மீது கொலைக் குற்­றச்­சாட்டு இருந்­த­தும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வந்­த­தும் அதற்குக் கார­ணங்­கள் என்­பது அதன் வாதம்.

மாவட்ட நீதி­பதி பிரெண்டா டான் கோரிக்­கையை நிரா­க­ரித்­தார். தகுந்த நேரத்­தில் மாண­வர் அவ­ரது பெற்­றோ­ரு­டன் பேசு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­லாம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள மாண­வ­ருக்கு மன­ந­லச் சோதனை நடத்த அவரை இரண்டு வாரங்­க­ளுக்கு மேல் சாங்கி சிறைச்­சா­லை­யின் மருத்­துவ நிலை­யத்­தில் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கு­மாறு செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

தனது பள்ளியில் பயின்ற 13 வயது மாணவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர் மீது சென்ற மாதம் 20ஆம் தேதியன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதற்கு முதல் நாளன்று ரிவர் வேலி ஹை பள்­ளி­யில் கொலை நிகழ்ந்­தது.

குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள மாண­வர் தனது உயிரை மாய்த்­துக்­கொள்ள முயற்சி செய்­த­தைத் தொடர்ந்து 2019ஆம் அண்­டில் மன­ந­லக் கழ­கத்­தில் சிகிச்சை பெற்­ற­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கொலைக் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

ஆனால் 18 வய­துக்கு உட்­பட்ட கொலைக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அதற்­குப் பதி­லாக ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.வழக்கு இம்மாதம் 24ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

ரிவர் வேலி ஹை பள்ளி கொலை வழக்கு