மகளுடன் பாலியல் உறவு, தந்தை மீது சந்தேகம்

மகளுடன் பாலியல் உறவு, தந்தை மீது சந்தேகம்

1 mins read
44682146-93ba-450c-b27f-fd39896dbedf
-
Google News Preferred Icon

தனது மகளுடன் பல முறை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 59 வயது ஆடவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நெருங்கிய உறவினருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிங்கப்பூரரான அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாலியல் நடவடிக்கைகள் 2019ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தன. அப்போது ஆடவரின் மகளுக்கு 27 வயது.

இருவரின் பெயர்களையும் வெளியிடத் தடை உத்தரவு உள்ளது. மகளின் விருப்பத்துடன் பாலியல் நடவடிக்கைகள் இடம்பெற்றனவா என்பது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருந்தாலும் நெருங்கிய உறவினருடன் பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்.