சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானம் இருந்த 700 போத்தல்கள் பறிமுதல்

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானம் இருந்த 700 போத்தல்கள் பறிமுதல்

1 mins read
aa379ffe-6461-4562-baf5-c7deef6371f1
பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதமாகத்தயாரிக்கப்பட்ட மதுபானபோத்தல்கள்.படம்: சிங்கப்பூர் சுங்கத் துறை -

சட்­ட­வி­ரோ­த­மா­கத் தயா­ரிக்­கப்­பட்ட மது­பா­னங்­க­ளைக் கொண்ட சுமார் 700 போத்­தல்­களை சிங்­கப்­பூர் சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல்செய்­துள்­ள­னர். சீனா­வைச் சேர்ந்த இரண்டு ஆடவர்­கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். சென்ற வாரம் நடத்­தப்­பட்ட சோத­னை­களில் மது­பா­னம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. பிடோ க்நார்த் ஸ்ட்­ரீட் இரண்­டில் உள்ள சிங்­கப்­பூர் வாக­னத்தை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர். வாக­னத்­தின் பின் கூடத்­தில் சட்­ட­வி­ரோத மது­பா­னத்­தைக் கொண்ட 60 போத்­தல்­கள் இருந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அதற்­குப் பிறகு கேன்­பரா ரோட்­டில் இருந்த அந்த வாக­னத்­தின் 42 வயது ஓட்­டு­ந­ரின் வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டது.

அங்கு மேலும் 300 போத்­தல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அதற்­குப் பின்­னர் உட்­லண்ட்ஸ் ஈஸ்ட் தொழில்­துறை பேட்­டை­யில் சட்­ட­வி­ரோ­த­மா­கத் தயா­ரிக்­கப்­பட்ட மது­பா­னம் கொண்ட மேலும் 313 போத்­தல்­களும் 34 கன­ரகபோத்­தல்­களும் இரண்டு வாளி­களும் பறி­மு­தல்செய்­யப்­பட்­டன. மது­பா­னம் தயா­ரிக்­கத் தேவை­யான சில கரு­வி­களும் அங்­கி­ருந்­தன. உட்­லண்ட்ஸ் ஈஸ்ட் தொழில்­துறை பேட்­டை­யில்­தான் மது­பா­னம் சட்­ட­வி­ரோ­த­மா­கத் தயா­ரிக்­கப்­பட்­ட­தாகச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அங்கு சீனா­வைச் சேர்ந்த ஒரு 47 வயது ஆட­வர் கைது­செய்­யப்­பட்­டார். சோதனை­களில் சட்­ட­வி­ரோ­த­மா­கத் தயா­ரிக்­கப்­பட்ட மது­பா­னத்­தைக் கொண்ட மொத்­தம் 673 போத்­தல்­களும் 34 கன­ரகபோத்­தல்­களும் இரண்டு வாளி­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளி­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக ஆறாண்­டு சிறைத் தண்­ட­னை­யும் 5,000 வெள்ளி வரை­யி­லான அபரா­த­மும் விதிக்­க­ப்­ப­ட­லாம். சம்­பந்­தப்­பட்ட பொருட்­க­ளுக்­கான வரி­யில் 40 மடங்கு தொகை­யைக் கட்­ட­வேண்­டிய நிலை­யும் ஏற்­ப­ட­லாம்.