'கொவிட்-19 தொற்றால் மூன்று வயது சிறுமி இறந்துவிட்டதாக கூறும் பதிவு பொய்யானது'

'கொவிட்-19 தொற்றால் மூன்று வயது சிறுமி இறந்துவிட்டதாக கூறும் பதிவு பொய்யானது'

1 mins read
fd950b0a-07c0-463a-b47d-082dbe92189b
-
Google News Preferred Icon

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மூன்று வயது சிறுமி இறந்துவிட்டதாக இணையத்தில் வலம் வரும் ஃபேஸ்புக் பதிவு உண்மையல்ல என்று சுகாதார அமைச்சு இன்று (ஆகஸ்ட் 14) தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த ஃபேஸ்புக் பதிவு ஐலீன் லோ எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் மாண்டதாகவும் அவரது மரணம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையாக இல்லை என்று பதிவு தெரிவித்தது.

கே கே மருத்துமனையில் எந்த ஒரு குழந்தையும் கொவிட்-19 காரணமாக மரணம் அடையவில்லை என்று சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்