கொவிட்-19 கிருமியுடன் வாழ்க்கை: வெளிப்படையான விவாதிப்புக்கு இது தக்க தருணம்

டியோ யிக் யிங்

சளிக்காய்ச்சல் போன்ற நோயை உண்டாக்கும் கிருமியைப் போலவே கொவிட்-19 கிருமியும் இனி நம்மோடுதான் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்ட சூழலில், இதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் கொவிட்-19 வழிகாட்டித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர இருக்கிறது.

வழிகாட்டித் திட்டத்தை சிங்கப்பூர் விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளின நேரத்தில் இரண்டுவித கருத்துகள் தெரியவந்தன.

அந்தத் திட்டத்தைத் தொடங்க இது அநேகமாக பொருத்தமான நேரம்தான் என்பது ஒரு கருத்து. மக்கள்தொகையில் ஐந்தில் நான்கு பங்கினர் முற்றிலும் தடுப்பூசி போட்டுகொண்டுள்ள நிலை, இந்த மாத இறுதியில் ஏற்படும்; கட்டுப்பாடுகள் காரணமாக தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய சமூக, பொருளியல் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன ஆகியவை இதற்கான காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.

வழிகாட்டித் திட்டத்தைத் தொடங்க இது சரின நேரம்தானா என்பது இரண்டாவது கருத்து.

சிங்கப்பூரில் தொற்றுக் குழுமம் அதிக மாகி உள்ளது; அன்றாடம் தொடர்பில்லாத தொற்றுகள் அதிக அளவில் தெரிவிக்கப்படுகின்றன; 70க்கும் அதிக வயதுள்ள 80,000 பேருக்கும் மேற்பட்ட முதியவர்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை; 12 வயதுக்கும் குறைந்த சிறார்கள் தடுப்பூசிக்குத் தகுதிபெறாத நிலை உள்ளது; இதுவரை இல்லாதபடி பத்து நாட்களுக்குள் மரணங்கள் கூடிவிட்டன.

இவை எல்லாம் இந்தக் கருத்துக்கான காரணங்கள். கொவிட்-19 கிருமியுடன் கூடிய வாழ்கைக்கான வழிகாட்டித் திட்டத்தை தொடங்க சிங்கப்பூர் உண்மையிலேயே ஆயத்தமாக இருக்கிறதா?

தொடங்கும் பட்சத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதையும் மரணங்களையும் எந்த அளவுக்கு நாம் எதிர்பார்க்கவேண்டும்?

காலநேரம் முக்கியமானது

சிங்கப்பூர் இப்போது ஆயத்த நிலையில்தான் இருக்கிறது. அடுத்த மாதம் தான் அது முதல் உருமாற்ற கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பது முக்கியம். வழிகாட்டித் திட்டத்தைத் தொடங்க செப்டம்பர் மாதம் சாத்தியமானதாக இருக்கலாம். சிங்கப்பூர் மக்களில் 80% முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அது டெல்டா கிருமித்தொற்றில் இருந்தும் காக்கும். அப்போதும்கூட கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாகத்தான் அகற்றப்படும்.

தடுப்பூசி போடப்படாத சிறார்கள்

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறாத 12 வயதுக்குக் குறைந்த சிறார்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இத்தகைய சிறார்களுக்குத் தடுப்பூசி போடலாம் என்பதற்கான சந்தேகத்திற்கு இடமில்லாத, தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும்போது இவர்களுக்கு விரைவாக, பாதுகாப்பாக தடுப்பூசி போடும் இயக்கத்தை சிங்கப்பூர் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தடுப்பூசியைப் பொறுத்தவரை இத்தகைய சிறார்களுக்கு நல்ல செய்தியும் இருக்கிறது, கெட்ட செய்தியும் இருக்கிறது.

தடுப்பூசி போடவில்லை என்றாலும்கூட தொற்றுக்கு ஆளான சிறார்களில் 99% பேருக்கு இலேசான அறிகுறிகள்தான் இருக்கும்; உடல்நலனில் நீண்டகாலப் போக்கில் பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், ஆஸ்துமா போன்ற நோயுள்ள சிறார்களுக்குக் கிருமி தொற்றினால் பெரியவர்களைப் போலவே கடுமை ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தடுப்பூசி போடாத முதியவர்கள்

அண்மையில் உயிர் இழந்த ஆறு பேருமே தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள். அவர்களில் நால்வருக்கு வயது 60க்கும் அதிகம். 60க்கும் அதிக வயதுள்ள ஏறத்தாழ 150,000 பேர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருக்கிறார்கள். சிங்கப்பூர் கொரோனா கிருமியுடன் கூடிய வாழ்க்கைக்கான வழிகாட்டித் திட்டத்தைத் தொடங்கும்போது இத்தகைய முதியவர்களுக்கு ஏற்படக்கூடிய கடுமை ன பாதிப்பு மற்றும் மரண ஆபத்து உச்சத்தை எட்டும்.

பொதுச் சுகாதார பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஹன்னா கிளாப்ஹம் அவருடைய குழுவினர்களும் ஒரு கணக்கீட்டைச் செய்து இருக்கிறார்கள். இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களில் ஏறத்தாழ 2,100 பேர் 2022ல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலை ஏற்படும். அவர்களில் 480 பேர் மரணம் அடையக்கூடும் என்று அவர்களின் கணக்கு தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களாகவே இருப்பார்கள். இவர்களிடையே தடுப்பூசி இயக்கத்தை 5% அதிகப்படுத்தினால் மரணங்களை ஏறத்தாழ 60% குறைக்கலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களில் பலரும் அது வேண்டாம் என்று இருக்கிறார்கள். சொந்த நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம். அதேவேளையில், முடிவு எடுக்க இயலாத நிலையில் இருக்கும் மூப்படைந்தோரும் கணிசமாக உள்ளனர். இவர்களுக்குத் தடுப்பூசி போட்டால் தாங்க முடியாத அளவுக்குப் பல வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்று இவர்களின் குடும்பத்தினர் கருதுகிறார்கள்.

இவர்களின் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டியதுதான். அதேவேளையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்கள், அவர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும்கூட, வழிகாட்டித் திட்டம் வரும்போது பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இத்தகைய குடும்பங்கள் உணரவேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோர் உள்ள வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அரணை அமைத்துக் கொள்ளவேண்டும். அதேவேளையில், இத்தகைய ஒரு நிலையை காலவரம்பு இன்றி தொடரக்கூடிய ஆற்றல் தொடர்பில் குடும்பத்தினர் வெளிப்படைக எல்லாவற்றையும் விவாதித்து பேச வேண்டியதும் தேவைப்படும்.

சுருக்கமாக, தெளிவாக சொல்ல வேண்டுமானால் முதியவர்களைப் பொறுத்தவரை தடுப்பூசி என்பது வாழ்வா சாவா என்பதாகவே இருக்கும்.

தடுப்பூசி போட்டும் மரணம்

சிங்கப்பூரில் இத்தகைய மரணம் எப்போது என்பதுதான் இப்போது பிரச்சினை. இதர நாடுகளில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதை வைத்து தடுப்பூசி ஆற்றல் குறைந்த ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

மக்கள் அனைவரும் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஒரு நாட்டில்கூட பாதிக்கப்படக்கூடியவர்கள் இருப்பார்கள் என்பதே இதற்கான காரணம்.

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் காரணமாக ஆண்டுக்குச் சராசரிக ஏறத்தாழ 800 பேர் மரணம் அடைகிறார்கள். அவவர்களில் பலரும் முதியவர்கள். அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள். இது போலவே கொவிட்-19க்கு பிந்தைய அந்தக் கிருமியுடன் வாழ வேண்டிய காலத்திலும் நிகழலாம். தடுப்பூசி முகக்கவசம் போன்றவற்றால் இதை தவிர்த்துக்கொள்ளலாம்.

எதிர்நோக்கும் பாதை

கொவிட்-19 கிருமியுடன் கூடிய வாழ்வுக் கான வழிகாட்டித் திட்டம் இன்னமும் நிச்சயமில்லாத நிலைகளை ஏதிர்நோக்கியே இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். தடுப்பூசி கொடுக்கும் பாதுகாப்பு ஆற்றல் காலப்போக்கில் மங்கிப் போகலாம். புதிதாக தலை எடுக்கும் கிருமி தடுப்பூசிக்குச் சவாலாக இருக்கலாம். இவற்றில் எதுவுமே தடுப்பூசியின் முக்கியத்துவத்தைக் குறைக்கவில்லை. இந்நிலையில், பரிணமிக்கும் சூழலை சிங்கப்பூர் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும்.

உடலில் தடுப்பூசி பாதுகாப்பு ஆற்றலைக் கூட்டும் ஊசி மருந்துக்கான தேவை பற்றி பரிசீலிக்க அது தராக வேண்டும்.

தெளிவாக விளங்காத, நிச்சயமில்லாத நிலவரங்கள் காரணமாக மருத்துவமனை சிகிச்சை, மரணம் ஆகியவை பற்றி வெளிப்படைன விவாதிப்புகள் இடம்பெற வேண்டும். இதன் மூலம் உயிரையும் வாழ்வையும் பாதுகாக்கக்கூடிய தலைசிறந்த முடிவுகளை மக்கள் எடுக்க இயலும்.

பேராசிரியர் டியோ யிக் யிங் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் துறைத் தலைவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!