20,500 வேலை, பயிற்சி வாய்ப்புகள் உள்ளன

20,500 வேலை, பயிற்சி வாய்ப்புகள் உள்ளன

2 mins read
c92909ca-90ed-4c70-9e73-eee04ba3c192
-

தக­வல்­தொ­டர்­புத் துறை­யில் இன்­ன­மும் 20,500க்கும் மேற்­பட்ட வேலை, பயிற்சி, வேலை அனு­பவ வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­

பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் இறு­திக்­குள் இந்­தத் துறை­யில் கிட்­டத்­தட்ட 16,200 பேர் வேலை­யில் அமர்த்­தப்­பட்ட பிற­கும் மேலும் பல­ருக்கு அதில் வாய்ப்­பு­கள் உள்­ள­தாக மனி­த­வள அமைச்­சும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தன.

இந்­தச் சவால்­மிக்க கால­

கட்­டத்­தில் வேலை தேடு­வோ­ருக்கு வேலை­ தேடித் தர தக­வல்­தொ­டர்­புத் துறை நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து வேலை நிய­மன முக­வை­கள் வரை 240 பங்­கா­ளி­க­ளு­டன் மனி­த­வள அமைச்­சும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யும் கடந்த ஆண்டு இணைந்து செயல்­பட்­ட­ன.

சவால்­மிக்க கால­கட்­டங்­களில் பங்­கா­ளி­க­ளின் வளங்­களும் கட்­ட­மைப்­பு­களும் வேலை தேடு­வோ­ருக்­குப் பெரி­தும் உத­வு­வ­தாக LinkedIn ஏஷியா பசி­பிக் ஊழி­யர்­க­ளி­டம் காணொளி வழி பேசிய மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் கூறி­னார்.

வேலை தேடு­வோ­ருக்­குத் தகுந்த வேலை­யைத் தேடித் தர செயற்கை நுண்­ண­றிவு அணு­கு­மு­றை­யைப் பயன்­ப­டுத்த நிறு­வ­னங்­களை அர­சாங்­கம் ஊக்­குவிக்கிறது. சமூக அள­வில், சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யின் தொண்­டூ­ழி­யர்­கள் வேலை தேடு­வோ­ரு­டன் பல ஆண்­டு­கள் அனு­ப­வ­மும் பெரிய கட்­ட­மைப்­பும் கொண்­ட­வ­ரின் உத­வியை நாடி­னர்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, சில்­லறை வர்த்­த­கம் போன்ற துறை­க­ளுக்கு இந்­தத் திட்­டம் கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது.

மற்ற துறை­க­ளுக்கு இத்­திட்­டம் படிப்­ப­டி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

ஊழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான திறன்க­ளைக் கற்­றுத் தர சீனர் மேம்­பாட்டு உதவி மன்­றம், மெண்­டாக்கி, சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்கம், யூரே­ஷி­யர் சங்­கம் ஆகிய நான்கு சுய உத­விக் குழுக்­களும் திட்­டங்­க­ளைக் கொண்­டுள்­ளன.

இதற்­கி­டையே, அர­சாங்­கத்­துக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் இடையே பால­மாக தொழிற்­சங்­கங்­களும் வர்த்­த­கச் சங்­கங்­களும் தொழிற்

­ச­பை­களும் செயல்­பட்டு வரு­கின்­றன.

இவற்­றில் பல அமைப்­பு­கள் வேலை, திறன்­கள் மேம்­பாட்­டுத் திட்­டங்­களை நடத்­த­வும் வர்த்­தக உரு­மாற்­றத்தை ஊக்­கு­விக்­க­வும் அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­கின்­றன.

வேலை நிய­மன இணைய வாசல்­களும் வேலை நிய­மன முக­வை­களும் வேலை தேடு­வோ­ருக்­குக் கூடு­தல் தெரி­வு­களை வழங்­கு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் தலை­சி­றந்த உல­க­ளா­விய நிறு­வ­னங்­கள், தொழில்­துறை சங்­கங்­கள், பயிற்­சிக் கழ­கங்­கள் ஆகி­யவை இருப்­ப­தா­க­வும் வேலை நிய­மன இடை­வெ­ளியை எதிர்­கொள்ள இவற்­றின் உத­வி­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றும் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­தார்.