தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி தடுப்பூசிச் சான்றிதழ்கள், அதிருப்தி அடையும் வாடிக்கையாளர்களால் உணவகங்களுக்குப் பிரச்சினை

1 mins read
18e5a11f-6e8e-48e6-8528-b2aa40340e3d
அனுமதி மறுக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் சிலர் கோபமடைந்ததாக உணவகங்கள் தெரிவித்தன.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தி­

லி­ருந்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுக்­கள் உண­வ­கங்­களில் ஒன்­றாக அமர்ந்து உண­

வ­ருந்த அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், போலி தடுப்­பூசிச் சான்­றி­தழ்­க­ளைக் காட்டி உண­வ­கத்­தில் உண­வ­ருந்த முயற்சி செய்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுத்து அவர்­களை அங்­கி­ருந்து போகச் சொல்­லும் நிலை சில உண­வ­கங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கில்­லினி சாலை­யில் உள்ள '87 ஜஸ்ட் தாய்' எனும் தாய்­லாந்து உண­வு­வ­கை­களை விற்­கும் உண­வ­கம் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் திரும்­பிப் போகச் சொன்­னது.

குளிர்­சா­தன வசதி இல்­லாத அந்த உண­வ­கத்­தைப் பலர் காப்­பிக்­கடை என்று கருதி ஜோடி­

க­ளாக வந்­த­தாக உண­வ­கத்­தின் இணை நிறு­வ­னர் எரிக் டான் தெரி­வித்­தார்.

உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக்­க­டை­க­ளி­லும் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களும் அதி­க­பட்­சம் இரு­வர் கொண்ட குழுக்­களில் ஒன்­றாக அமர்ந்து உண­வ­ருந்­த­லாம்.

குளிர்­சா­தன வசதி இல்­லா­த­தால் உண­வ­க­மாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­றும் அதை காப்­பிக்­

க­டை­யா­கத்­தான் எடுத்­துக்­கொள்ள முடி­யும் என்று கூறி வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

டிரேஸ்­டு­கெ­தர் செயலி, ஹெல்த் ஹப் செயலி, தடுப்­பூசி அட்­டை­கள், டிரேஸ்­டு­கெ­தர் கருவி ஆகி­யவை மூலம் ஒரு­வர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வரா என்­பதை உண­வ­கங்­கள் தெரிந்­து­கொள்­ள­லாம்.

இது­பற்றி சில வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை என்­றும் அனு­மதி மறுக்­கப்­ப­டும்­போது அவர்­கள் கோப­ம­டை­வ­தா­க­வும் உண­வ­கங்­கள் தெரி­வித்­தன.