நச்சுணவால் பாதிப்பு

நச்சுணவால் பாதிப்பு

1 mins read
3982f6be-3162-414e-b0cc-65cb0b74a41b
-

வீட்­டி­லி­ருந்து செயல்­படும் நிறு­வ­ன­மான 'தி பீச்சி ஷுகர்­மேக்­கர்' தயா­ரித்த கேக் வகை­க­ளைச் சாப்­பிட்டு 15 பேர் நோய்­வாய்ப்­பட்­ட­னர்.

அவர்­களில் ஒன்­பது பேர் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் இரண்டு சிறு­வர்­கள் அடங்­கு­வர்.

அவர்­க­ளுக்கு மூன்று மற்­றும் நான்கு வயது.

அவர்­க­ளது உடல்­நிலை சீராக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

இது­கு­றித்து விசா­ரணை நடத்­து­வ­தாக சுகா­தார அமைச்­சும் சிங்­கப்­பூர் உணவு முக­வை­யும் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தன.

இம்­மா­தம் 5ஆம் தேதி­யி­லி­ருந்து 7ஆம் தேதி வரை அந்த நிறு­வ­னம் தயா­ரித்த கேக் வகை­க­ளைச் சாப்­பிட்­ட­வர்­கள் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 7ஆம் தேதி பிற்­ப­கல் 2 மணி அள­வில் பெண்­டி­மி­யர் சாலை­யில் உள்ள 'தி பீச்சி ஷுகர்­மேக்­கர்' நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து தமது மக­னின் பிறந்­த­நாள் கேக்­கைப் பெற்­றுக்­கொண்­ட­தாக திரு­வாட்டி லுவோ ஜே. ஒய். தெரி­வித்­தார்.

கேக் உரு­கி­யி­ருந்­த­தைக் கவ­னித்­த­தா­க­வும் அது பற்றி நிறு­வ­னத்­தி­டம் கூறி­ய­போது கவ­லைப்­ப­டா­மல் கேக்­கைச் சாப்­பி­ட­லாம் என்று தம்­மி­டம் தெரி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் திரு­வாட்டி லுவோ கூறி­னார்.

கேக்­கைச் சாப்­பிட்ட தமது மகன் உட்­பட குடும்­பத்­தா­ரும் விருந்­தி­னர்­களும் பணிப்­பெண்­ணும் நோய்­வாய்ப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். தமது மகன் வலி­யால் துடித்­த­தா­க­வும் அவன் மவுண்ட் எலி­ச­பெத் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் திரு­வாட்டி லுவோ கூறி­னார். உண­வுப் பொருட்­கள் தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள் சுத்­தம், சுகா­தா­ரத்­துக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும் என்று நினை­வூட்­டப்­பட்­டுள்­ளது.