'கிருமித்தொற்றால் 3 வயது சிறுமி இறக்கவில்லை'

'கிருமித்தொற்றால் 3 வயது சிறுமி இறக்கவில்லை'

1 mins read
ac69ac18-1d02-48c1-a9dd-f89550b55df2
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மூன்று வயது சிறுமி இறந்­து­விட்­ட­தாக இணை­யத்­தில் வலம் வரும் ஃபேஸ்புக் பதிவு உண்­மை­யல்ல என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அந்த ஃபேஸ்புக் பதிவு ஐலீன் லோ எனும்

பெய­ரில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் சிறுமி மாண்­ட­தா­க­வும் அவ­ரது மர­ணம் வேண்டு ­மென்றே மறைக்­கப்­பட்­ட­தா­க­வும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையாக இல்லை என்று பதிவு தெரிவித்தது. காய்ச்சல் காரணமாக அந்தச் சிறுமி இம்மாதம் 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேகே மருத்­து­வம­னை­யில் எந்த ஒரு குழந்­தை­யும் கொவிட்-19 கார­ண­மாக மர­ணம் அடை­ய­வில்லை என்று சுகா­தார அமைச்சு உறுதி செய்­துள்­ளது.

பொய்ச் செய்­தி­க­ளைப் பரப்ப வேண்­டாம் என்று அது பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டது.