கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மூன்று வயது சிறுமி இறந்துவிட்டதாக இணையத்தில் வலம் வரும் ஃபேஸ்புக் பதிவு உண்மையல்ல என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
அந்த ஃபேஸ்புக் பதிவு ஐலீன் லோ எனும்
பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சிறுமி மாண்டதாகவும் அவரது மரணம் வேண்டு மென்றே மறைக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையாக இல்லை என்று பதிவு தெரிவித்தது. காய்ச்சல் காரணமாக அந்தச் சிறுமி இம்மாதம் 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேகே மருத்துவமனையில் எந்த ஒரு குழந்தையும் கொவிட்-19 காரணமாக மரணம் அடையவில்லை என்று சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

