வாகன நிறுத்துமிடங்களில் மீண்டும் 10 நிமிட அவகாச முறை

வாகன நிறுத்துமிடங்களில் மீண்டும் 10 நிமிட அவகாச முறை

1 mins read
f993794b-6be3-49f1-869b-5c921f6df43d
-

இம்­மா­தம் 19ஆம் தேதி­யி­லி­ருந்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஆகி­ய­வற்­றால் நிர்­வ­கிக்­கப்­படும் மின்­னி­யல் கட்­ட­ண­மு­றை வாகன நிறுத்­து ­மி­டங்­களில் முதல் பத்து நிமிட அவ­காச முறை மீண்­டும் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

அதன்­படி, இந்த வாகன நிறுத்­து­மி­டங்­க­ளுக்­குச் செல்­லும் வாக­னங்­கள் பத்து நிமி­டங்­க­ளுக்­குள் வெளி­யே­றி­னால் கட்­ட­ணம் செலுத்தத் தேவை­யில்லை.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக அண்­மை­யில் 20 நிமிட அவ­கா­சம் வழங்­கப்­பட்­டது.

கால அவ­கா­சம் 10லிருந்து 20 நிமி­டங்­க­ளுக்கு உயர்த்­தப்­ப­டு­வ­தாக கடந்த மே மாதம் 21ஆம் தேதி­யன்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தமது ஃபேஸ்புக் மூலம் அறி­வித்­தார். கொவிட்-19 சூழ­லின்­போது உணவு விநி­யோ­கச் சேவை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் உணவு விநி­யோக ஓட்­டு­நர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் இந்த மாற்­றம் கொண்டு வரப்­பட்­டது.

தற்­போது கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் நிலை­யில் கால அவ­கா­சம் மீண்­டும் 10 நிமி­டங்­க­ளுக்­குக் குறைக்­கப்­ப­டு­கிறது.