மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தேசிய தின அணிவகுப்பு 2021

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தேசிய தின அணிவகுப்பு 2021

1 mins read
77d34dad-457f-431b-ba7c-ba5365d679e1
-

மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு அம்­சங்­க­ளு­ட­னான சிறப்பு நிகழ்­வாக இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று நடை­பெ­றும் தேசிய தின அணி­

வ­குப்பு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது ஒழுங்­குச் சட்­டத்­தின் கீழ் இந்த அறி­விப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன்­படி 'தி ஃபுலோட்@மரினா பே'யைச் சுற்­றி­யுள்ள வட்­டா­ரங்­கள் சிறப்பு நிகழ்வு நடை­பெ­றும் இடங்­க­ளாக எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று அந்த இடங்­களில் மிகக் கடு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

பொது­மக்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

'தி ஃபுலோட்@மரினா பே'யில் பாது­காப்­புக் கட்­டுப்­பா­டு­கள் இம்­மா­தம் 21ஆம் தேதி அதி­காலை 12 மணி­யி­லி­ருந்து இரவு 11.59 மணி வரை நடப்­பில் இருக்­கும்.

பாது­காப்­புக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருக்­கும்­போது அங்கு செல்­லும் பொது­மக்­களை போலி­சார் சோத­னை­யி­டு­வர். இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று ஒலி­பெ­ருக்கி போன்ற குறிப்­பிட்ட சில பொருட்­களை அங்கு கொண்டு செல்லத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.