புதிதாக 50 பேருக்கு பாதிப்பு

1 mins read
a62f9697-c036-4e16-b5b0-bb76adb3b616
-

சிங்கப்பூரில் புதிதாக 50 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று சமூக அளவில் ஏற்பட்டுள்ளது. இவர்களில் முப்பது பேர், முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். அத்துடன் அறுவர், கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எஞ்சிய 14 பேர், தொடர்பில்லாத கிருமித்தொற்றுச் சம்பவங்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. அத்துடன், வெளிநாட்டில் கிருமி தொற்றி இங்கு மூன்று பேர் வந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் சிங்கப்பூரில் புதிதாக 53 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோருடன் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 66, 172ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சு மேல் விவரங்களை பின்னர் வெளியிடும்.