ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு விழா

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசளிப்பு விழா

1 mins read
a7cfbd2b-ea25-485a-8e4a-060ab5e407a9
-

ஆனந்த பவன் உணவகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 12வது ஆண்டாக நடத்தும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வரும் 22ஆம் தேதியன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற இருக்கிறது.

இவ்வாண்டு கட்டுரை நூலுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு. எஸ். மனோகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றிய மலாயாப் பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் மலர்விழி சின்னையாவும் உரையாற்றவிருக்கிறார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் இணை விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் முனைவர் ந.செல்லக்கிருஷ்ணன் 'பாரதியாரின் கட்டுரைகள்' எனும் தலைப்பில் சிறப்புச் சிற்றுரை ஆற்றுவார்.

Zoom Meeting ID: 822 2081 3361 அல்லது http://youtube.com/c/singaporetamilwriters யூடியூப் நேரலை வழி நிகழ்வில் இணைந்திடலாம்.