தொற்றால் 3 வயது சிறுமி இறந்ததாக கூறும் பதிவுக்கு எதிராக 'பொஃப்மா'

தொற்றால் 3 வயது சிறுமி இறந்ததாக கூறும் பதிவுக்கு எதிராக 'பொஃப்மா'

1 mins read
1d5e2542-cac5-44ca-b7f6-86ab058306ff
-

கொவிட்-19 கிருமித்தொற்றால் மூன்று வயது குழந்தை ஒன்று, கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக ஃபேஸ்புக் தளத்தில் வலம்வரும் செய்திக்கு எதிராக சுகாதார அமைச்சு நேற்று 'பொஃப்மா' சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவைப் பிறப்பித்தது.

இதைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் உத்தரவிட்டார். இதன்படி, திருத்த உத்தரவை ஃபேஸ்புக் தளம் பதிவேற்றம் செய்வதுடன் அது உண்மையான தகவல்களுக்கான இணைப்பையும் கொண்டிருக்க வேண்டும். இது அனைத்து சிங்கப்பூர் பயனாளர்களுக்கும் தெரியும் வண்ணம் அமைய வேண்டும். ஜலீன் லோ என்பவர் ஃபேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இது பொய்த் தகவல் என்று நேற்று முன்தினம் அமைச்சு அறிவித்திருந்தது. சிங்கப்பூரின் மருத்துவ மனைகளில் எந்தக் குழந்தையும் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.