சமூகத்தில் மேலும் 50 பேருக்கு கொவிட்-19; இரு பேருந்து நிலையங்களில் கிருமிக் குழுமங்கள்

சமூகத்தில் மேலும் 50 பேருக்கு கொவிட்-19; இரு பேருந்து நிலையங்களில் கிருமிக் குழுமங்கள்

2 mins read
2f80f5de-db0e-449d-921f-462442f2ceed
செங்காங் பேருந்து நிலையம் தொடர்பில் கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூ­கத்­தில் புதி­தாக 50 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­பு­திய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களில், முன்­ன­தாக கிரு­மித்­தொற்று இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்டு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் 30 பேர்.

வழக்­க­மான கண்­கா­ணிப்­புப் பரி­சோ­தனை மூலம் தொடர்பு இருந்­த­தாக மேலும் அறு­வர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

எஞ்­சிய 14 பேருக்கு எவ்­வாறு கிருமி தொற்­றி­யது என்று இன்­னும் அறி­யப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த மூவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது. இவர்­கள் இங்கு வந்­த­வுடன் தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்­ட­னர். இந்­நி­லை­யில் நேற்று மொத்­தம் 53 புதிய கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

இத்­து­டன் சிங்­கப்­பூ­ரில் மொத்­தம் 66,172 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, பீஷான் மற்­றும் செங்­காங் பேருந்து நிலை­யங்­களில் பணி­யாற்­று­வோர் உட்­பட குறைந்­தது 22 பேர் கொண்ட இரண்டு கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கி­யுள்­ளன. பீஷான் பேருந்து நிலை­யம் தொடர்­பில் குறைந்­தது ஒன்­பது பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் செங்­காங் பேருந்து நிலை­யம் தொடர்­பில் குறைந்­தது 13 பேர் பாதிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் நேற்­றைய நில­வ­ரம் குறிப்­பிட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்ட மூன்று கிரு­மிக் குழு­மங்­களில் இவை இரண்­டும் அடங்­கும்.

அறி­விக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி பேருந்து நிலை­யங்­க­ளைச் சேர்ந்த பணி­யா­ளர்­கள் 16 பேர் என்று கூறப்­பட்­டது. இந்­நி­லை­யில், 97% பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்கு கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­ட­தாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

வழக்­க­மாக மேற்­கொள்­ளும் கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னைப் பணி­க­ளின்­போது பேருந்து ஓட்­டு­நர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­யா­ன­தாக நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இருப்­பி­னும், இந்த 16 பேருக்­கும் கடு­மை­யான தொற்று அறி­குறி­கள் இல்லை என்­றும் கூறப்­பட்­டது. இரண்டு பேருந்து நிலை­யங்­க­ளி­லும் சுத்­தம் செய்­யும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன் இரண்டு பேருந்து நிலை­யங்­க­ளி­லும் பணி­யாற்­றும் அனைத்து பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்­கும் ஆன்­டி­ஜன் விரைவு பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

மூன்­றா­வது அறி­விக்­கப்­பட்ட கிரு­மித்­தொற்­றுக் குழு­மம், தனி­ந­ப­ரைச் சார்ந்­த­தாக உரு­வா­கி­யுள்­ளது. அக்­கு­ழு­மத்­தில் நேற்று முன்­தின நில­வ­ரப்­படி மூன்று கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன. இதற்­கி­டையே, 54 சின் சுவீ ரோட்­டில் அமைந்­துள்ள 'மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்' பாலர் பள்­ளி­யில் குறைந்­தது 17 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­தி­செய்­யப்­பட்­டு­விட்­டன.

'சாஃப்ரா தெம்­ப­னிஸ்' கிரு­மிக் குழு­மத்­தில் குறைந்­தது 15 சம்­ப­வங்­கள் உறு­தி­யா­கி­யுள்­ளன.

தற்­போது குறைந்­தது 111 கிரு­மிக் குழு­மங்­கள் சிங்­கப்­பூ­ரில் உள்­ளன. அவற்­றில் குறைந்­தது மூன்று சம்­ப­வங்­களும் அதி­க­பட்­ச­மாக 1,155 சம்­ப­வங்­களும் அடங்­கும்.