உடல் வெப்பநிலையைச் சோதிக்கும் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு

உடல் வெப்பநிலையைச் சோதிக்கும் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு

1 mins read
fea3f451-a6b6-49c9-aa4e-121146b62dca
-

பொது இடங்­களில் மக்­க­ளது உடல் வெப்­ப­நி­லை­யைச் சோதிப்­பது வரும் வியா­ழக்­கி­ழ­மை­மு­தல் நிறுத்­தப்­ப­ட­உள்­ள­தாக சுகா­தார அமைச்சு முன்­ன­தாக அறி­வித்­தி­ருந்­தது. அத்­து­டன் மேலும் அதி­க­மா­னோர் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டும் வரு­கின்­ற­னர்.

இத­னால், வெப்­ப­நி­லை­யைச் சோதிக்க அமர்த்­தப்­படும் பணி­யா­ளர்­க­ளுக்­கான தேவை குறைந்­து­வ­ரும் போக்கை வேலை­வாய்ப்பு நிறு­வ­னங்­கள் உணர்ந்து வரு­கின்­றன.

இருப்­பி­னும், இப்­ப­ணி­யில் உள்ள சிலர், தங்­க­ளுக்­குத் தொடர்ந்து வேலை இருக்­கும் என்­றும் தாங்­கள் வேறு அம்­சம் தொடர்­பான பணிக்கு மாற்­றப்­ப­டு­வர் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

கொள்­ளை­நோய் கடந்த ஆண்டு ஏற்­பட்­ட­து­மு­தல், பொது மற்­றும் தனி­யார் பிரி­வு­களில் உடல் வெப்­ப­நி­லை­யைச் சோதிப்­பது போன்ற தற்­கா­லிக வேலை­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­வது, தனிமை உத்­த­ர­வுக்­கான செயல்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது, பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, நோயா­ளி­க­ளுக்­குச் சேவை­கள் வழங்­கு­வது போன்­ற­வற்­றிக்கு இப்­ப­ணி­யா­ளர்­கள் உதவி வரு­கின்­ற­னர்.

இத்­த­கைய பணி­க­ளி­லி­ருந்து மாற்­றப்­ப­டு­வோ­ருக்­குப் புதிய வேலை­க­ளைத் தேடித் தர, வெவ்­வேறு தொழில்­து­றைப் பங்­கா­ளி­களு­டன் என்­டி­யுசி வேலைப் பாது­காப்பு மன்­றம் இணைந்து பல்­வேறு நிறு­வ­னங்­க­ளைக் கொண்ட கட்­டமைப்பு ஒன்றை உரு­வாக்கி வரு­கிறது.

தேவை கருதி ஊழி­யர்­கள் தங்­களது வேலை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கும் வேறு வேலைக்கு அமர்த்­தப்­ப­டு­வ­தற்­கும் இக்­கட்­டமைப்பு கைகொ­டுக்­கும் என்­றார் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் வேலை நிய­மன, வேலைத்­த­குதி கழ­கத்து தலைமை நிர்­வாக அதி­காரி திரு கில்­பெர்ட் டான்.