தனியார் வாடகை கார்களைவிட டாக்சிகள் கூடுதல் சேவை

தனியார் வாடகை கார்களைவிட டாக்சிகள் கூடுதல் சேவை

2 mins read
fa5043f7-66bd-42e7-86a8-3d8d53881332
டாக்சிகளின் வரிசை. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் தனி­யார் வாட­கை கார்­க­ளைக் காட்டிலும் டாக்சி களில் மேற்கொள்ளப்பட்ட பயண எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்­துள்­ளது.

கடந்த மே மாதம் கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­பட்­ட­போது டாக்சி, வாடகை கார் பய­ணங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­தை நிலப் போக்­கு­

வ­ரத்து ஆணை­யம் அண்­மை­யில் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி ­வித்­துள்­ளன.

அதி­க­மா­னோர் வீட்­டில் வேலை செய்­யும் ஏற்­பாட்­டுக்கு மாறி­ய­தைத் தொடர்ந்து மே, ஜூன் மாதங்­களில் ஓரி­டத்­தி­லி­ருந்து மற்­றோர் இடத்­திற்­குச் செல்­லக்­கூ­டிய அன்­றாட பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை 21 விழுக்­காட்­டுச் சரி­வைச் சந்­தித்­தன.

இரு மாதங்­களில் 959,000 பய­ணங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஆணை­யத்­தின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதே­போல தொலை­பேசி வாயி­லாக முன்­ப­திவு செய்­வ­தும் 22 விழுக்­காடு குறைந்து அன்­றாட எண்­ணிக்கை 744,000 ஆனது. இத்­த­கைய முன்­ப­திவு பெரும்­பா­லும் தனி­யார் வாடகை கார்­க­ளுக்­காக செய்­யப்­ப­டு­பவை.

அதே நேரம் சாலை­யோ­ரத்­தில் டாக்­சி­களை நிறுத்தி மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை வியப்­பான மீட்­சி­யைக் காட்­டின.

அதன் அன்­றாட எண்­ணிக்கை 16 விழுக்­காடு மட்­டுமே குறைந்து 215,000 ஆனது.

கடந்த அண்டு ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யில் சர்­கிட் பிரேக்­கர் என்­னும் தொற்­று­நோய் முறி­ய­டிப்­புக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போ­தும் இதே­போன்று நிகழ்ந்­தது.

ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டும்­போது அந்த மூன்று மாதங்­களில் அன்­றாட தொலை­பே­சிப் பதிவு முறை­யி­லான அன்­றா­டப் பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை 60.4 விழுக்­காடு சரிந்­தது. ஆயி­னும் சாலை­யோ­ரம் மேற்­கொள்­ளப்­படும் டாக்சி பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை 53 விழுக்­காடு மட்­டுமே குறைந்து 228,000 ஆகி இருந்­தது.

இந்த வேறு­பாட்­டுக்­கான கார­ணத்தை சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் போக்­கு­வ­ரத்­துப் பொரு­ளி­யல் நிபு­ணர் வால்­டர் திசேரா விளக்­கி­னார்.

"சாலை­யோ­ரம் மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்­கள் அதி­கம் திட்­ட­மி­டப்­ப­டா­த­தைப் போன்­றவை. ஆனால், தொலை­பேசி வாயி­லாக மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்­கள் அதிக நெகிழ்ச்­சித் தன்மை வாய்ந்­தவை. எந்த நேரத்­தி­லும் மாற்­றி­ய­மைக்­கக்­கூ­டி­ய­தா­க­வும் ரத்து செய்­யப்­ப­டக்­கூ­டி­ய­தா­க­வும் அத்­த­கைய பய­ணங்­கள் இருக்­கும்," என்று அவர் தெரி­வித்­தார்.

மேலும், டாக்­சி­யில் தன்­வி­ருப்­பப்­படி மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்­கள் சில முக்­கிய சந்­தைப் பகு­தி­களில் வலு­வா­ன­தா­கத் தொட­ரு­கின்­றன. குறிப்­பாக, மருத்­து­வ­ம­னை­கள், பல­துறை மருந்­த­கங்­கள், எம்­ஆர்டி நிலை­யங்­கள், கடைத்­தொ­கு­தி­கள் போன்­ற­வற்­றில் உள்ள டாக்சி நிறுத்­தங்­கள் இந்த எண்­ணிக்கை உய­ரக் கார­ண­மா­கின்­றன.

"சாலை­யோ­ரம் டாக்­சி­களை நிறுத்தி மேற்­கொள்­ளப்­படும் பய­ணம் பழ­கிப்­போன ஒன்று. பெரும்­பா­லும் மூத்த குடிமக்­கள் இவ்­வாறு செய்­வார்­கள். மருத்­துவ முன்­ப­தி­வு­களை நிறை­வேற்ற, தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள, தேவை­யான பொருட்­களை வாங்க என பல்­வேறு நோக்­கங்­க­ளுக்­காக அவர்­கள் டாக்சி பய­ணம் மேற்­கொள்­வார்­கள்," என்­றார் திரு வால்­டர்.

சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய டாக்சி நிறு­வ­ன­மான கம்­ஃபர்ட்­டெல்­கு­ரோ­வின் பேச்­சா­ளர் திரு­வாட்டி டேமி டான் கூறு­கை­யில், "டாக்சி­கள்­தான் பய­ணி­க­ளுக்கு எளி­தான பய­ண­மு­றை­யைத் தரு­கிறது. சாலை­யோ­ரம் நிறுத்தி பய­ணம் மேற்­கொள்­ளும் வச­தியை டாக்­சி­கள் தரு­கின்­றன. முன்­ப­திவு முறை­யி­லான பய­ணங்­கள் சரிந்­த­தற்கு இது ஒரு கார­ண­மாக இருக்­க­லாம்," என்­றார்.

பயணங்களின் எண்ணிக்கை சரிந்தாலும் டாக்சிகள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்கிறது புள்ளிவிவர அறிக்கை