கட்டுப்பாடு தளர்ந்த முதல் வாரஇறுதியில் மெதுவாக மீண்ட வர்த்தகம்

கட்டுப்பாடு தளர்ந்த முதல் வாரஇறுதியில் மெதுவாக மீண்ட வர்த்தகம்

1 mins read
bfe0c176-b194-4a09-9895-77214d7a06d3
-
Google News Preferred Icon

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் ஒன்றாகச் சேர்ந்து உண வகங்களில் சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடுத் தளர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அந்தத் தளர்வின் முதல் வார இறுதியில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்று உணவகங்கள் எதிர்பார்த்தன. காரணம், தளர்வு நடப்புக்கு வந்த ஒருசில நாள் களில், எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தகம் மீளவில்லை என்ற நிலை காணப்பட்டது. எனினும் வார இறுதியில் பெரும்பாலான உணவகங்களில் அதிகக் கூட்டம் காணப்பட்டதாக செய்தி கள் தெரிவித்தன. சாப்பிட வருவோரின் தடுப்பூசி நில வரத்தைச் சரிபார்க்க சில உணவகங்களில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர் கள் கடந்த இரு நாட்களாக அதிகமானோரிடம் சரிபார்ப்பு களை மேற்கொண்டு வாடிக்கை யாளர்களை அனுமதித்தனர்.

படத்தில்: ஸ்குவேர் 2 கடைத் தொகுதி உணவகத்தில் நேற்று காணப்பட்ட நிலவரம்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்