செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
927e0ee7-cb06-4bba-88c8-af5e674ca6ac
-

குழந்தை தத்தெடுப்பு விண்ணப்பம் ஐந்தாண்டு காணாத சரிவு

குழந்தைகளைத் தத்தெடுக்கும் விகிதம் கடந்த ஆண்டில் ஐந்து ஆண்டு காணாத சரிவைச் சந்தித்தது. தத்தெடுக்க 363 விண்ணப்பங்கள் மட்டுமே வந்தன. சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சமூக நலத் துறை தலைமை இயக்குநர் தத்தெடுப்பு விவகாரத்தைக் கவனிக்கிறார். 2019ஆம் ஆண்டு 453 தத்தெடுப்பு அனுமதி கோரி 453 விண்ணப்பங்களை இந்தத் துறை கையாண்டது. வெளி நாடுகளுக்குச் சென்று தத்தெடுப்புக்கான குழந்தைகளைத் தேடும் பணியில் தத்தெடுப்பு முகவர்கள் ஈடுபடுவார்கள். கொள்ளைநோய் பரவல் காரணமாக வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் அவர்களால் அந்தப் பணியைச் செய்ய இயலவில்லை. தத்தெடுப்பு விண்ணப்பங்கள் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் கையாளப்பட்ட தத்தெடுப்பு விண்ணப்பங்களில் 70 விழுக் காடு வெளிநாட்டுக் குழந்தைகள் தொடர்பானது என அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளி டம் கூறினார். எஞ்சியவை சிங்கப்பூரில் பிறந்த குழந்தை கள்.

சிங்கப்பூரில் தத்தெடுக்கப்படும் வெளிநாட்டுக் குழந்தைகள் பெரும்பாலும் மலேசியா, இந்தோனீசியாவைச் சேர்ந்தவை என தத்தெடுப்பு முகவர்கள் கூறுகின்றனர்.

ஆண், பெண் எதுவாக இருந்தாலும் தத்தெடுக்க முன்வந்த தம்பதி

தத்தெடுக்கும் ஆர்வம் மிகுதி கொண்ட தம்பதி ஒன்று எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஏற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்த விவரம் இப்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொவிட்-19 முறியடிப்பு கட்டுப் பாடுகள் நடப்பில் இருந்த ஏப்ரல் மாதம் 'டச் அடாப்ஷன்' என்னும் தத்தெடுப்பு நிலையத்திடம் இருந்து அந்தத் தம்பதிக்கு ஒரு தகவல் சென்றது. "மணமாகாத பெண் ஒருவர் இன்னும் இரு மாதங்களில் குழந்தை பெற உள்ளார். அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரியாது. இருந்தும் நீங்கள் அந்தக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறீர்களா?," என்று அந்த அழைப்பில் பேசிய சமூக சேவை ஊழியர் கேட்டார். தம்பதி உடனடியாக ஒப்புக் கொண்டது. பத்து வயதில் மகனுடன் உள்ள அந்தத் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை தேவைப்பட்டது. 44 வய தான பெண்ணால் இரண்டாவது குழந்தையை ஈன்றெடுக்க இயலவில்லை. செயற்கைக் கருத்தரிப்பு முறையும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. எனவே தத்தெடுக்கும் முயற்சியில் தம்பதி இறங்கியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தங்களின் பெயர் விவரத்தை வெளியிட தம்பதி விரும்பவில்லை. "முதல் குழந்தையை வயிற்றில் சுமக்கும்போது அது எந்தக் குழந்தை என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அதைப்போலவே, பிறக்க இருக்கும் குழந்தையைத் தத்தெடுக்கும்போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஏற்க முன்வந்தோம்," என்றார் அந்தப் பெண்.