கிருமிக் காலமும் ஒருநாள் கலைந்தோடும், அதுவரை பொறுத்திரு

கிருமிக் காலமும் ஒருநாள் கலைந்தோடும், அதுவரை பொறுத்திரு

4 mins read
c1576d29-ec53-45bd-87fe-add0f437d389
உங்­க­ளுக்­குள் நடக்­கும் போராட்­டங்­கள் உண்­மை­யா­னவை. அவற்றை நினை­வு­றுத்­தும் உணர்­வு­க­ளைக் கருத்­தில்கொண்டு உங்­க­ள் மீது சற்று பரிவு காட்­டுங்­கள். -
multi-img1 of 2

இந்த கொரோனா கிருமிப் பரவல் கால­கட்­டம் மக்களுக்குத் தாளா அழுத்­தத்­தை­யும் மீளா துய­ரத்­தை­யும் அளித்து வரு­கிறது. நாம் எந்த நிலை­யில் இருந்­தா­லும் சூழ­லுக்கு ஏற்ப மாறிக்­கொள்­ளும் கட்­டா­யத்­திற்கு இந்­தக் கிரு­மித்­தொற்றுக் காலம் நம்மை அனு­தி­ன­மும் தள்­ளி­வி­டு­கிறது.

தெளி­வற்­ற­தாக, உறு­தி­யற்­ற­தாக நமது நிலைமை தற்­போது உள்­ளது. வாய்­விட்டு அழத் தோன்­று­கிறது. கிருமி தொற்­றி­விடும் என்ற அச்­சம் உள்­ளது. கொரோனா உல­கெங்­கும் வலை விரிப்­ப­தைக் காணும்­போது கோபம் வரு­கிறது. இப்­படி ஒரே உணர்வு நமக்­குள் இருப்­ப­தில்லை. கட்டுக் ­க­டங்­காத கிரு­மித்­தொற்று என்று நம் கண்­க­ளுக்­குத் தோன்­று­வதை நாம் கட்­டுப்­ப­டுத்­தப் பார்க்­கி­றோம்.

சிலர் தங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழக்­கின்­ற­னர். வேறு சிலர், வழக்­க­நிலை, உண்­மை­நிலை, சமு­தா­யத்துடனும் உல­கத்­து­டனும் தாங்­கள் கொண்­டுள்ள தொடர்பு என்ன என்­பதை மறந்து போகின்­ற­னர்.

இவ்­வாறு நமக்கு வேதனை அளிக்­கும் உணர்­வு­களில் அதி­க தாக்­கத்­தை ஏற்படுத்தக்கூடியது ஆத்­தி­ரமே. கொவிட்-19 கார­ணத்­தால் எளி­தில் ஆத்­தி­ர­மும் எரிச்­ச­லும் அடை­வ­தைப் பலர் உண­ரத் தொடங்கி­விட்­ட­னர். அது­வும் புரிந்­து­கொள்­ளக்­கூடியதே. வேலை, வீடு, தனிப்­பட்ட வாழ்க்கை என அனைத்து அம்­சங்­க­ளி­லும் பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளுக்கு ஏற்ப நாம் மாறிக்­கொள்­வ­தால் இந்­நிலை.

'இது­வும் கடந்து போகும்' என்று சொல்ல முடி­யா­மல் 'இது கடந்து போகுமா' என்று கேட்­கத் தோன்­று­கிறது.

உதா­ர­ணத்­திற்கு, சிங்­கப்­பூ­ரில் நமது எம்­ஆர்டி பய­ணத்தை எடுத்­துக்­கொள்­வோம். காலை­யில் வழக்­க­மான பய­ணத்தை எதிர்­பார்த்து ஒரு ரயி­லில் ஏறு­கி­றீர்­கள். ஆனால், திடீ­ரென்று மின்­சா­ரத் தடை ஏற்­பட்டு அடுத்த நிலை­யத்­தில் இறங்க வேண்­டி­யுள்­ளது. பேருந்து நிறுத்­தத்­திற்கு விரைந்­தால், அங்கு மக்­கள் கூட்­டம் அலை­மோது­கிறது. 'கிராப்' சவா­ரிப் பய­ணத்­தில் செல்லலாம் என்­றால் வரு­வ­தா­கக் கூறிய ஓட்­டு­நர், முடி­யாது என்று மனதை மாற்றிக்­கொண்­டார். களைத்­துப்போய் எம்­ஆர்டி நிலை­யம் பக்­கம் சென்­றால் ரயில் சேவை மீண்­டும் தொடங்­கி­விட்­டதை உணர்­கி­றீர்­கள்.

நொந்­து­போய் அந்த ரயி­லில் ஏறு­கி­றீர்­கள். ஒரு­வித நிம்­மதி உணர்வு ஏற்­பட்­டாலும் மறு­ப­டி­யும் மின்­சா­ரத் தடை ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்று வேண்­டிக்­கொள்­கி­றீர்­கள். மறு­ப­டி­யும் அது நடக்­கிறது. மீண்­டும் நடக்­கும் சாத்­தி­ய­மும் உள்­ளது. நமக்­குப் பிடிக்­காத ஓர் உற­வி­னர் இருப்­பாரே, அது­போல் இந்த கொவிட்-19.

நமது உணர்­வு­களை ஒரு பனிப்­பாறையுடன் ஒப்­பிட்­டுப் பார்க்­க­லாம்.

நம் கண்­க­ளுக்­குப் புலப்­படும் பனிப்­பாறை­யின் ஒரு பகு­தி­தான், நமது உணர்வு­க­ளின் வெளிப்­பாடு. அதா­வது நாம் நடந்­து­கொள்­வது. இருப்­பி­னும், பனிப்­பா­றை­யின் பெரும்­ப­குதி நீருக்கு அடி­யில் மறைந்­தி­ருக்­கிறது. நம் உணர்­வு­க­ளுக்­குத் தொடர்­பு­டைய வலி, அச்­சம் ஆகி­யவை அந்த மறைந்­தி­ருக்­கும் உணர்­வு­கள் போன்­றவை. நம்­மால் இதி­லி­ருந்து தப்­பிக்க இய­லாது. ஆனால், நிலை­மை­யைச் சமா­ளிக்­கும் வழி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­க­லாம்.

அதற்கு உத­வும் ஓர் உத்­தி­தான் 'Recognize', 'Accept', 'Investigate', 'Nurture' எனப்­படும் 'ரெய்ன்' (RAIN). இச்­செ­யல்­மு­றையை மிஷெல் மெக்­டோ­னல்ட் என்­ப­வர் உரு­வாக்­கி­யுள்­ளார்.

விமர்­சிக்­கா­மல், எந்த ஒரு முடி­வெ­டுக்­கா­மல் தன்­னைச் சுற்றி நடப்­பவை தொடர்­பான விழிப்­பு­ணர்வு, அத­னு­டன் கூடிய எண்­ணங்­கள் மற்­றும் உணர்­வு­க­ளைத் தக்­க­வைத்­துக்­கொள்ள இது உத­வும்.

அடை­யா­ளம் காணு­தல் (Recognize)

உங்­க­ளின் உணர்­வு­கள், பாதிப்பு ஏற்­படுத்­தும் நடத்­தை­யாக மாறு­வதை அடை­யா­ளம் காணுங்­கள். உங்­கள் உட­லின் எந்­தப் பகு­தி­யில் அந்த உணர்ச்சி அடங்கி­உள்­ளது என்­பதை அடை­யா­ளம் காண­வும் இது உத­வும். கோபம் வரும்­போது உங்­கள் கைக­ளைக் கவ­னி­யுங்­கள். அவற்றை நீங்கள் இறுக மூடிக்­கொள்­கி­றீர்­களா? செய்தி­களைப் பார்க்­கும்­போதோ படிக்­கும்­போதோ உங்­கள் மனம் கனப்­பது போன்ற உணர்வு தோன்­று­கி­றதா?

ஏற்­றுக்­கொள்­ளு­தல் (Accept)

உங்­க­ளுக்­குப் பின்­னால் பேருந்­தில் கூச்­சல் போட்­டுக்­கொண்­டி­ருக்­கும் சிறு­வர்­க­ளைப் பார்த்து நீங்­கள் கத்­தி­னால் தற்­கா­லி­க­மாக நிசப்­தம் நில­வும். ஆனால் அந்த இடத்­தில் ஒரு­வகை பதற்­றம் இருப்­பதை உணர்­வீர்­கள். இப்­படி எழக்­கூ­டிய ஓர் உணர்ச்­சியை எப்­படி அடுத்த முறை கட்­டுப்­ப­டுத்­து­வது? நிலை­மையை உணர்ந்து­கொண்டு, இத்­த­கைய உணர்ச்­சி­கள் இயல்பு என்று புரிந்­து­கொள்­வதே பதில்.

உணர்ச்­சி­கள் அதி­க­மாக உண­ரப்­படும் இடத்­தில் பிறர் தம்மை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்ற தேவை­யும் அதி­க­மாக இருக்­கும். இதை நினை­வில் கொள்­ளுங்­கள். ஆனால் அதே­வேளை நம் உணர்­வு­களை அடக்­கிக்­கொண்டு நிரா­க­ரித்­தால் அவை என்ன என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ளா­த­து­போல் ஆகி­வி­டும்.

ஆராய்ந்து பார்த்­தல் (Investigate)

உணர்­வு­களை ஏற்­றுக்­கொண்­டதை அடுத்து உங்­க­ளுக்­குள் ஏற்­படும் உணர்வு­கள், தாக்­கம் ஆகி­ய­வற்றை ஆரா­யுங்­கள். ஆத்­தி­ரம், சோகம் என்­றால் என்ன, உங்­களுக்கு எத்­த­கைய கிளர்ச்சி தோன்­று­கிறது, உங்­க­ளுக்­கும் பிற­ருக்­கும் அதி­கத் தீங்கு இழைக்­கா­மல் அந்­தக் கிளர்ச்­சியை எவ்­வாறு நீங்­கள் கழித்­துக்­கட்­ட­லாம்? இது தொடர்­பில் ஒரு நிபு­ண­ரின் உத­வியை நாடி­னால்­தான் என்ன? மன­நல ஆலோ­ச­கர், சமூ­கச் சேவை­யா­ளர் போன்­றோர் இதற்­கா­கவே உள்­ள­னர், உதவி நாட பல்­வேறு தளங்­களும் உண்டு.

பரா­ம­ரித்­துக்­கொள்­ளு­தல் (Nurture)

உணர்ச்­சி­க­ளைப் பரா­ம­ரித்­துக்­கொள்­வது முக்­கி­யம். 'எனக்கு ஏன் இப்­படி தோன்­று­கிறது?' என்று உங்­க­ளையே நீங்­கள் விமர்­சித்­துக்­கொண்­டும் குறை கூறிக்­கொண்­டும் இருக்­க­வேண்­டாம்.

உங்­க­ளுக்­குள் நடக்­கும் போராட்­டங்­கள் உண்­மை­யா­னவை. அவற்றை நினை­வு­றுத்­தும் உங்­க­ளது உணர்­வு­க­ளைக் கருத்­தில் கொண்டு உங்­க­ள் மீது நீங்­களே சற்று பரிவு காட்­டுங்­கள்.

ஒரு­நாள், நிலைமை மாறும். இது­வும் கடந்து போகும். தாம­தித்து நடக்­கக்­கூடும் ஆனால் உறு­தி­யாக நடக்­கும். அதில் நம்பிக்கை கொள்­ளுங்­கள்.

துவாஸ் நிலை­யத்­தி­லி­ருந்து எம்­ஆர்­டி­யில் பய­ணம் செய்து இறு­தி­யில் சாங்கி விமான நிலை­யத்தை அடை­வது போன்­றது இந்­தப் பய­ணம். 'கிராப்' சவா­ரி­யில் சென்­றால் விரை­வில் அடைந்­து­வி­ட­லாம். ஆனால் 'கிராப்' கிடைக்­கா­மல் போக­லாம்.

அத­னால், இன்­னும் கொஞ்ச காலம் பொறுத்­தி­ருங்­கள்.

படிப்­ப­டி­யாக நாம் ஒரு­நாள் சாங்­கியை அடை­வோம். படிப்­ப­டி­யாக நாம் ஒரு­நாள் இந்த கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­வோம்.

படங்­கள்:

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், தேவா­னந்­தன்

இளையர்க்கான ஆலோசனை ஆதரவு

CARE சிங்கப்பூர்

தொடர்பு எண்: 6978 2728

திங்கள்-வெள்ளி: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

TOUCHline (TOUCH சமூக சேவைகளின்கீழ் இயங்குகிறது)

தொடர்பு எண்: 1800 377 2252

திங்கள்-வெள்ளி: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

Fei Yue சமூக சேவைகள்

தொடர்புக்கு: ec2.sg (இணையவழி நேரலை உரையாடல்)

திங்கள்-வெள்ளி: காலை 10 மணி முதல்­ நண்பகல் 12 மணி வரை;

பிற்பகல் 2 மணி முதல்­ மாலை 5 மணி வரை