சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பிஸ்மில்லா கோழி பிரியாணி

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பிஸ்மில்லா கோழி பிரியாணி

1 mins read
31a35d17-995c-4a07-9d4a-f6b8a107a9f4
படம்: பிஸ்மில்லா பிரியாணி உணவகம் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அடுத்த மாதத்திலிருந்து இங்குள்ள புகழ்பெற்ற அங்காடி உணவுகளில் சிலவற்றைச் சுழற்சிமுறையில் அதன் விமானச் சேவைகளில் வழங்கும்.

டன்லப் ஸ்திரீட் பிஸ்மில்லா பிரியாணி கடையின் கோழி பிரியாணி, பூன் டோங் கீ கோழிச்சோறு, பீச் ரோடு இறால் நூடல்ஸ் போன்றவை அவற்றில் அடங்கும்.

வரும் மாதங்களில் இன்னும் பல இத்தகைய உணவுகளை விமானப் பயணங்களில் வழங்க, இங்குள்ள உணவுக்கடைகளுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாக எஸ்ஐஏ நிறுவனம் தெரிவித்தது.

மேலும், விமானப் பயணிகள் தனித்துவமான சிங்கப்பூர் அனுபவங்களை இதனால் பெறமுடியும் என்று எஸ்ஐஏயின் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திரு இயோ பீ டெய்க் கூறினார்.

எனினும் முதல், வர்த்தக வகுப்பப் பயணிகள் மட்டுமே இந்தச் சேவையைப் பெறுவார்கள்.

குறிப்புச் சொற்கள்