ஓங்: மூத்தோரில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுவிட்டனர்

ஓங்: மூத்தோரில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுவிட்டனர்

2 mins read
8a2e59f3-ca9f-42b6-bc05-ba70ef3c807c
தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோரில் ஒருவர். கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரின் மூத்த குடி­மக்­களில் பெரும்­பா­லோர் ஒரு முறை­யா­வது கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொண்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார்.

70 வய­தைத் தாண்­டிய மூத்த குடி­மக்­களில் 85 விழுக்­காட்­டி­னர் ஒரு முறை­யா­வது தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அவர் சொன்­னார். 60லிருந்து 69 வய­துக்கு உட்­பட்­டோ­ரி­டையே 90 விழுக்காட்டுக்கும் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டுள்ளனர் என்று அவர் சொன்­னார்.

மேலும், சிங்­கப்­பூ­ரில் தற்­போது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 40,000 தடுப்­பூசிகள் போடப்­பட்­டு­வ­ரு­கின்றன. இந்த எண்­ணிக்கை, இதற்கு முன் இருந்­த­தில் கிட்டத்தட்ட பாதி அளவாகும். பெரும்­பா­லோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ளது அளவு குறைந்ததற்குக் கார­ணம் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

மக்கள்தொகையில் ஆக அதிகமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட நாடாக சிங்கப்பூர் இருக்கக்கூடும் என்று சிஸ்92 எஃப்எம் வானொலிக்கு அளித்த பேட்டியில் திரு ஓங் கூறினார்.

கடந்த சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொ­கை­யில் சுமார் 75 விழுக்­காட்­டி­னர் இரண்டு முறை கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்ளதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகும் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாதோருக்கு விரைவில் கூடுதல் தடுப்பூசி தேவைப்படலாம் என்றார் அவர். அத்தகையோருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் சுமார் ஓராண்டு காலத்திற்குப் பிறகு கூடுதல் தடுப்பூசி தேவைப்படலாம். மருத்­துவ ரீதி­யான கார­ணங்­களால் ஃபைசர், மொடர்னா ஆகிய நிறு­வ­னங்­க­ளின் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள முடி­யா­தோரை சீனா­வின் சினொ­வேக் தடுப்­பூ­சி­பைப் போட்­டுக்­கொள்­வது குறித்து ஆலோ­சிக்­கு­மாறு திரு ஓங் அறிவு­றுத்­தி­னார்.

கொவிட்-19 கிருமி தொற்­றாமல் தடுப்­ப­தற்­கான ஆற்­றல் 'எம்­ஆர்­என்ஏ' ரக தடுப்­பூ­சி­களில் இருக்கும் அளவு சினொ­வேக் தடுப்­பூ­சி­களில் இல்­லா­மல் இருக்­க­லாம். ஆனால் மோச­மாக நோய்­வாய்ப்­ப­டு­வ­தைத் தவிர்க்­கும் ஆற்­றல் சினொ­வேக் தடுப்­பூ­சி­களில் அதி­கம் உள்­ளது என்­பதை அவர் சுட்­டி­னார். எனி­னும், டெல்டா வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்றை சினொவேக் எவ்­வ­ளவு தூரம் தடுக்கும் என்­பது இன்­ன­மும் தெரி­ய­வில்லை எனத் திரு ஓங் சொன்­னார். தடுப்­பூ­சி­போட்­டுக்­கொள்ள முடி­யா­தோர், பிறர் அவற்றைப் போட்­டுக்­கொள்­ளும் வரை காத்­தி­ருக்­க­வேண்­டும் என்­றா­ர் அவர்.

"நாம் தடுப்­பூசி போட்டுக்­கொள்­ளும்­போது நம்மை மட்­டும் பாது­காக்­க­வில்லை-அதைப் போட்­டுக்­கொள்ள முடி­யா­தோ­ரை­யும் பாது­காக்­கி­றோம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.