கிருமித்தொற்று அபாயத்தை ஏற்படுத்திய குற்றம்

கிருமித்தொற்று அபாயத்தை ஏற்படுத்திய குற்றம்

1 mins read
c4e102e3-82c9-489a-b8d1-045e6b01f2af
-

பிற­ருக்கு கொவிட்-19 கிருமியைப் பரப்பும் அபா­யத்தை விளை­வித்­த­தாக பிரிட்­ட­னி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பிய மாணவி மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கில் அவர் குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. பிரிட்­ட­னில் இளங்­க­லைப் பட்­டக்­கல்வி பயின்ற எஸ்­தர் டான், 24, சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பிய பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி விமான நிலை­யத்­தில் ஓர் உணவு நிலை­யத்­துக்­குச் சென்­றார்.

அதன் பின்னர், அவர் கிள­மெண்­டி­யி­ல் ஒரு மருந்­த­கத்­துக்­கும் சென்­றார். அங்கு, தனது பயண விவ­ரங்­கள் பற்றி பொய் சொல்லி மருந்து வாங்­கி­னார். அதன் பிறகு அவ­ருக்கு கொவிட்-19­ தொற்று ஏற்பட்டது. அதை­ய­டுத்து அவர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.