இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) தளர்த்தப்படுவதையடுத்து, நாளை மறுதினம் முதல் பொது நூலகங்களுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. தேசிய நூலகம், 26 பொது நூலகங்கள், தேசிய ஆவணக் காப்பகம், முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலை ஆகியவற்றில் ஒரு நேரத்தில் இருக்கக்கூடியவர்களின் விகிதம் 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுவதாக தேசிய நூலக வாரியம் அறிவித்துள்ளது.
வார நாட்களில் நூலகத்தில் இருக்கக்கூடிய அதிகபட்ச நேரக் கட்டுப்பாடு அகற்றப்படுகிறது. வாரயிறுதியில் நேரக் கட்டுப்பாடு தொடரும். வாரயிறுதியில் நூலகத்துக்குச் செல்ல https://go.gov.sg/library-visit-booking என்ற இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.

