தடுப்பூசியால் மாரடைப்பு: $225,000 நிதியுதவி

1 mins read
17fd5978-a899-4dc3-a9f9-cf04333e5c4b
-

முதல் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பிறகு மார­டைப்பு ஏற்­பட்ட 16 வயது பதின்ம வயது இளையரின் உடல்­நிலை சீராகி­வ­ரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. 'விஐ­எ­ஃப்­ஏபி' எனப்­படும் தடுப்­பூசி அபாய நிதி­யு­த­வித் திட்­டத்­தின்­கீழ் அவ­ருக்கு 225,000 வெள்ளி நிதி­யு­தவி வழங்­கப்­பட்டுள்ளது.

பாதிக்­கப்­பட்ட இளையர் தற்­போது உள்­நோ­யாளி சிகிச்சை பெற்று வரு­கி­றார். அன்­றாட நட­வடிக்­கை­களில் ஈடு­பட அவ­ருக்கு உதவி தேவைப்­ப­ட­வில்லை எனச் சுகா­தார அமைச்சு கூறி­யது.

வரும் வாரங்­களில் இளையர் விடு­விக்­கப்­ப­ட­லாம். ஆனால் அதற்குப் பிற­கும் அவ­ருக்கு வெளி­நோ­யாளி சிகிச்சை தேவைப்­ப­டக்­கூ­டும். அதன் பின்­னர்­தான் அவரால் மீண்­டும் பள்­ளிக்­குச் செல்­ல­வும் மற்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வும் முடி­யும் எனச் சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.சிறு­வ­னைக் கவ­னித்­து­வ­ரும் மருத்­து­வக் குழு அவ­ருக்­குத் தொடர்ந்து சிகிச்சை அளிப்­ப­தோடு அவ­ரின் உடல்­நி­லை­யைக் கண்காணிக்­கும்.

சென்ற மாதம் மூன்­றாம் தேதி­யன்று இளையருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது.

அதற்கு ஆறு நாட்­க­ளுக்கு முன்பு அவர் முதல் கொவிட்-19 தடுப்­பூ­சி­பைப் போட்­டுக்­கொண்­டார்.

தடுப்­பூ­சி­யால் வந்த பக்கவிளைவால் அவ­ரு­டைய இத­யத்­தின் தசை வீங்­கி­யது.

அத­னால் அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று அமைச்சு சொன்­னது.

அதிக எடை­யைத் தூக்கி அவர் செய்த உடற்­ப­யிற்சி உள்­ளிட்ட காரணங்­க­ளால் நிலைமை மேலும் மோச­ம­டைந்­தி­ருக்­க­லாம் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது.

'எம்­ஆர்­என்ஏ' ரக தடுப்­பூ­சியை முதல் முறை­யா­கப் போட்­டுக்­கொண்ட பிறகு இத­யத் தசை­யில் வீக்­கம் ஏற்­பட்­டோர் அதற்­குப் பிறகு அந்­தத் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளக்­கூ­டாது.