ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் ஒன்று வீவக புளோக் 695ல் நேற்றைய நிலவரப்படி ஆறு வீடுகளில் மொத்தம் 14 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வசிப்போருக்குக் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை புளோக்கின் கீழ்த் தளத்தில் சோதனை நடத்தப்படும்.
குடியிருப்பாளர்கள் தங்களின் அடையாள அட்டைையப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லவேண்டும். சோதனைக்காக கொடுக்கப்பட்ட நேரத்தைக் கடைபிடிக்குமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

