புதிதாக சேரும் மாணவர்களின் பெற்றோர் பாலர் பள்ளிக்குள் வர அனுமதி

புதிதாக சேரும் மாணவர்களின் பெற்றோர் பாலர் பள்ளிக்குள் வர அனுமதி

1 mins read
97c7148c-2506-481d-b79a-f7429dab6125
-

பாலர் பள்ளிகளில் புதிதாக சேரும் சிறுவர்களின் பெற்றோர் நாளை மறுதினம் முதல் அவற்றுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

எனி­னும் அவர்­கள் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான பாது­காப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­ற­வேண்­டும்.

உதா­ர­ணத்­திற்கு ஒரு நாளைக்கு ஒரு பெற்­றோர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வார்.

அந்தப் பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது 'ஏஆர்டி' சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

சில துறை­களில் ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும் அல்­லது ஒரு வாரத்­திற்கு இரண்டு முறை சோதனை மேற்­கொள்­ள­வேண்­டும் என்ற நிபந்­தனை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டுள்ளது.

பாலர்­பள்­ளி­க­ளி­லும் இது செயல்­ப­டுத்­தப்­படும். அக்­டோ­பர் மாதம் முதல் தேதி முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத பாலர்­பள்ளி ஊழி­யர்­கள் வாரத்­திற்கு இரண்டு முறை கட்­டா­ய­மாக 'ஏஆர்டி' சோத­னையை மேற்­கொள்­ள­வேண்­டும்.

மருத்­து­வக் கார­ணங்­க­ளால் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடியாத பாலர்­ பள்ளி ஊழி­யர்­களுக்­குச் சோத­னை­களை மேற்­கொள்ள அர­சாங்­கம் சலு­கை­கள் வழங்­கும்.

பெரும்­பா­லான பாலர்­பள்ளி ஊழி­யர்­கள் ஒரு முறை­யா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டுள்­ள­தாக பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு தெரி­வித்­தது.

பாலர்­பள்­ளி­கள் தொடர்ந்து விழிப்­பு­டன் நடந்­து­கொண்டு பாதுகாப்பு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றும் என்று அது கூறி­யது.

பாலர்பள்ளிகளுக்கு வருகை தரு­வோ­ரின் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வது போன்ற நட­வடிக்­கை­கள் அவற்­றில் அடங்கும்.