புதிய தனியார் வீட்டு விற்பனை ஜூலையில் 82.2% உயர்வு

புதிய தனியார் வீட்டு விற்பனை ஜூலையில் 82.2% உயர்வு

2 mins read
ec4569a7-efe4-401c-9445-0f8e12d81e53
-

கடந்த ஏப்­ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து குறைந்து வந்த புதிய தனி­யார் வீடு­க­ளின் விற்­பனை, ஜூலை மாதத்­தில் 82.2% உயர்ந்­துள்­ளது. தனி­யார் வீட்டு விற்­ பனை­யில் இவ்­வாண்டு ஏற்­பட்­டுள்ள இரண்­டா­வது பெரிய உயர்வு இது­வா­கும்.

ஜூலை மாதத்­தில் எக்­ஸி­கி­யூட்­டிவ் கூட்­டு­ரிமை வீடு­க­ளைச் சேர்க்­கா­மல் 1,589 புதிய தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­ட­தாக நகர சீர­மைப்பு வாரி­யம் நேற்று கூறி­யது. ஒப்­பு­நோக்க ஜூன் மாதத்­தில் 872 தனி­யார் வீடு­கள் விற்­கப்­பட்­டன.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்­து­டன் ஒப்­பி­டும்­போது தனி­யார் வீட்டு விலை 46.7% அதி­க­ரித்­தது.

கடந்த ஜூலை 22ஆம் தேதி, கிரு­மித்­தொற்றுக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்பட்­ட­போது வீடு­களை நேரில் சென்று பார்ப்­ப­தும் விற்­ப­னைக் கூடங்­களில் வரு­கை­யா­ளர் எண்­ணிக்­கை­யும் பெரி­தும் குறைந்து போயின.

கடும் கட்­டுப்­பா­டு­கள், வீடு­ களுக்கான தேவை­யைப் பெரி­தும் குறைக்­க­வில்லை என்று ஆரஞ்சு அண்ட் தியே சொத்து முகவை நிறு­வ­னத்­தின் ஆய்­வுப் பகுப்­பாய்­வுப் பிரி­வின் மூத்த துணைத் தலை­வர் கிறிஸ்­டீனா சன் கூறி­னார்.

கடந்த மாதம் பல தனி­யார் வீட்­டுத் திட்­டங்­களில் விற்­பனை அதி­க­மா­ன­தா­க­வும் தங்­க­ளால் வாங்க முடி­யாத அள­வுக்கு வீட்­டு­ வி­லை­ மேலும் ஏறக்­கூ­டும் என்ற அச்­சத்­தில் சிலர் அவ­ச­ர­மாக வாங்­கி­ய­தா­க­வும் திரு­வாட்டி சன் தெரி­வித்­தார்.

கடந்த ஜன­வரி மாதத்­தில் இவ்­வாண்டு ஆக அதி­க­மாக 1,633 தனி­யார் வீடு­கள் விற்­பனையாயின. ஆனால் ஏப்­ரல் முதல் ஜூன் மாதங்­களில் விற்­பனை குறைந்­தது.

அண்­மை­யில் அங் மோ கியோ அவன்யூ 1, லெண்­டோர் சென்ட்­ரல் ஆகி­ய­வற்­றில் அர­சாங்க நிலம்­ ஏலக் குத்­த­கை­யில் பெரிய விலைக்கு விற்­கப்­பட்­டது.

இது தனி­யார் வீட்டு விற்­பனை கடந்த மாதம் பெரி­தும் கூடி­ய­தற்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­க­லாம் என்று புரோப்­நெக்ஸ் சொத்து நிறு­ வ­னத்­தின் தலைமை நிர்­வாகி இஸ்மா­யில் கஃபூர் கூறி­னார்.

புற­ந­கர் பகு­தி­க­ளில்­தான் ஆக அதிக விற்­பனை நடை­பெற்­றது என்றார் திரு­வாட்டி சன். பாசிர் ரிஸ் 8, நோர்­மெண்­டன் பார்க், மிட்­வுட், செங்­காங் கிராண்ட் ரெசி­டன்­சஸ், கி ரெசி­டன்­சஸ் போன்ற திட்­டங்களில் பல வீடு­கள் விற்­கப்­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

ஜூலை­யில் விற்­கப்­பட்ட வீடு­களில் கிட்­டத்­தட்ட பாதி, $1.5 மில்­லி­ய­னுக்­குக் குறை­வாக விற்­கப்­பட்­டன.

ஜூலை மாத விற்­பனை ஏற்­றத்­தைப் பயன்­படுத்தி, இந்த மாதமும் தனி­யார் வீட்டு விற்­ப­னையை உயர்த்த தனி­யார் வீட்டு நிறு­வனங்­கள் முய­லும் என்று ஹட்­டன்ஸ் ஆசியா சொத்­துச் ­சந்தை நிறு­வனத்­தின் தலைமை நிர்­வாகி மார்க் யிப் கூறி­னார்.

ஆகஸ்ட் மாதம் சீனர்­க­ளின் ஆவி­கள் பசி­யா­றும் மாதம் என்­ப­தால் வழக்கமாக அந்நேரத்தில் வீடு­கள் பெரி­தும் கைமா­றாது.