தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஐஏ விமானங்களில் பிஸ்மில்லா கோழி பிரியாணி

1 mins read
c31c3663-0ac8-4b61-9134-3f0859b7c0aa
எஸ்ஐஏ நிறுவனம் அங்காடி உணவு வகைகளை அதன் விமானப் பயணங்களில் வழங்கவுள்ளது. படங்கள்: பிஸ்மில்லா பிரியாணி/பூன் டோங் கீ -
multi-img1 of 2

எஸ்­ஐஏ நிறு­வ­னம், அடுத்த மாதத்­தி­லி­ருந்து இங்­குள்ள புகழ்­பெற்ற அங்­காடி உண­வுகளில் சில­வற்றைச் சுழற்­சி­மு­றை­யில் அதன் விமா­னச் சேவை­களில் வழங்­கும்.

டன்­லப் ரோடு பிஸ்­மில்லா பிரி­யாணி கடை­யின் கோழி பிரி­யாணி, பூன் டோங் கீ கோழிச்­சோறு, பீச் ரோடு இறால் நூடல்ஸ் போன்­றவை அவற்­றில் அடங்­கும்.

வரும் மாதங்­களில் இன்­னும் பல இத்தகைய உண­வு­களை விமா­னப் பய­ணங்­களில் வழங்க, இங்­குள்ள உண­வுக்­க­டை­க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்­றப் போவ­தாக எஸ்­ஐஏ நிறு­வ­னம் தெரி­வித்­தது.

மேலும், விமா­னப் பய­ணி­கள் தனித்­து­வ­மான சிங்­கப்­பூர் அனு­பவங்­களை இத­னால் பெற­மு­டி­யும் என்று எஸ்­ஐ­ஏ­யின் வாடிக்­கை­யா­ளர் அனு­ப­வப் பிரிவின் மூத்த துணைத் தலை­வர் திரு இயோ பீ டெய்க் கூறி­னார்.

எனி­னும் முதல், வர்த்­தக வகுப்­பப் பய­ணி­கள் மட்­டுமே இந்தச் சே­வை­யைப் பெறு­வார்­கள்.