சமூக சேவைத் துறையில் வெளிநாட்­ட­வர் தேவை

சமூக சேவைத் துறையில் வெளிநாட்­ட­வர் தேவை

1 mins read
c7bcdfb7-e831-4115-bd7f-9a15d67a3c33
-

வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரின் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அதற்கு ஏற்றவாறு சமூக சேவைகளுக்கான தேவை கூடும் என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியுள்ளது. எனினும் இத்துறையில் பராமரிப்பு சேவைகளை மையமாகக் கொண்ட வேலைகளைச் செய்ய சிங்கப்பூரர்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதால் அக்குறையை வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு ஈடுகட்டவேண்டும் என்று அமைச்சு நேற்று கூறியது.

சமூகச் சேவை அமைப்புகளும் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.

ஊதியம் குறைவாக இருப்பது அத்துறை வேலை களில் சேர பலர் தயங்குவதற் கான முக்கிய காரணங்களில் ஒன்று என அதில் பணிபுரியும் சிலர் கூறினர். உடல்பலம் அதிகம் தேவைப்படுவதும் மாறிவரும் வேலை நேரமும் சிங்கப்பூரர்கள் இவ்வேலைகளில் சேர ஆர்வம் காட்டாததற்கு மேலும் சில காரணங்கள் என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

சிங்கப்பூரில் சமூகச் சேவைத் துறையில் சுமார் 15,000 பேர் பணியாற்றுகின்றனர். அவர் களில் சுமார் 40% பேர் வெளிநாட்டவர் என்றது அமைச்சு.