சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்குக் கிருமித்தொற்றுப் பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்குக் கிருமித்தொற்றுப் பாதிப்பு

1 mins read
30b711e6-fac0-4496-bca3-f56d66912624
-

சிங்கப்பூரில் புதிதாக 52 பேருக்கு சமூகத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது.

புதிய சம்பவங்களில் 35 பேர், முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர். எந்தத் தடுப்பூசியுமே போடாத அவர், கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தை எதிர்நோக்குகிறார். வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்டு இங்கு வந்துள்ள நால்வர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.