ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தில் மாற்றம்

ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தில் மாற்றம்

3 mins read
a24da040-fff2-42fa-ac43-a4022c6e927a
-

வெளிநோயாளி புற்றுநோய் சிகிச்சை: 2023 ஏப்ரல் முதல் குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமே காப்புறுதிப் பாதுகாப்பு கோர முடியும்

தனி­யார் காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தித் திட்­டங்­களை வாங்­கி­யி­ருப்­போர், 2023 ஏப்­ரல் முதல் வெளி­நோ­யாளி புற்­று­நோய்ச் சிகிச்­சை­களுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் குறிப்­பிட்ட சில மருந்­து­க­ளுக்­குக் காப்­பு­று­திக் கோரிக்கை விடுக்க இய­லா­மல் போக­லாம்.

அடுத்த ஆண்டு செப்­டம்­ப­ரில் இருந்து மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்­தின்­கீழ் வரும் மருத்­துவ ரீதி­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட, சிக்­க­ன­மான புற்­று­நோய் மருந்­துச் சிகிச்­சை­க­ளைச் சுகா­தார அமைச்சு பட்­டி­ய­லிட்­டுள்­ளது.

2023 ஏப்­ரல் மாதத்­தில் இருந்து விற்­கப்­படும் அல்­லது புதுப்­பிக்­கப்­படும் அனைத்து ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தித் திட்­டங்­க­ளுக்­கும் அப் பட்­டி­யல் பொருந்­தும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இப்­போ­தைக்கு, வசூ­லிக்­கப்­படும் கட்­ட­ணத்­தின் அடிப்­ப­டை­யில் வெளி­நோ­யாளி புற்­று­நோய் சிகிச்­சை­க­ளை­யும் பல ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தித் திட்­டங்­கள் உள்­ள­டக்கு­கின்­றன. அதா­வது, காப்­பு­று­தித் திட்­டத்­தின் ஒட்­டு­மொத்த ஆண்டு வரம்பு அடிப்­ப­டை­யில் சிகிச்­சைக் கட்டணத்திற்கான அதி­க­பட்ச கோரிக்கை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

புதிய மாற்­றத்­தின்­படி, சுகா­தார அமைச்சு அங்­கீ­க­ரித்­துள்ள பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ள கிட்­டத்­தட்ட 150 மருந்­து­க­ளுக்கு மட்­டுமே காப்­பு­றுதி கோர முடி­யும். அப்­பட்­டி­ய­லில் இடம்­பெறா மருந்­து­க­ளுக்­குக் காப்­பு­றுதி கோர முடி­யாது.

வெளி­நோ­யாளி புற்­று­நோய் சிகிச்­சைக்­கான காப்­பு­றுதி கோரிக்­கைக்­கும் வரம்பு நிர்­ண­யிக்­கப்­படும். அது பயன்­ப­டுத்­தப்­படும் மருந்­தைப் பொறுத்து அமை­யும்.

"ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தித் திட்ட வழங்­கு­நர்­கள், புதிய மாற்­றங்­க­ளைப் படித்து, சுகா­தார அமைச்சின் வழி­காட்­டு­த­லுக்கு இணங்க தங்­க­ளது காப்­பு­று­தித் திட்­டங்­களை முறைப்­ப­டுத்­து­வர்," என்று சிங்­கப்­பூர் ஆயுள் காப்­பு­று­திச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இருப்­பி­னும், புதிய விதி­முறை துணைக் காப்­பு­று­தி­க­ளுக்கு (ரைடர்) பொருந்­தாது. ஒருங்­கி­ணைந்த காப்­பு­று­தி­க­ளுக்­கான சந்தா மெடி­சேவ் மூலம் செலுத்­தப்­படும்.

அதா­வது, துணைக் காப்­பு­று­தி­கள் வாங்­கி­யுள்ள 1.7 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர்க்­கான சிகிச்­சைச் செலவை முழு­மை­யாக ஏற்­பதை எட்­டுக் காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் தொடர முடி­யும்.

ஒருங்­கி­ணைந்த காப்­பு­றுதி வாங்­கி­யுள்ள நோயா­ளி­கள், தங்­க­ளது சிகிச்­சைக்­கான செல­வில் ஆண்­டிற்கு $3,500 வரை­யும் மீதத் தொகை­யில் பத்து விழுக்­காட்­டை­யும் கையில் இருந்து செலுத்த வேண்­டும். எஞ்­சிய தொகை­யைக் காப்­பு­றுதி மூலம் பெற­லாம்.

2018ஆம் ஆண்­டிற்­கு­முன், நோயா­ளி­யின் சிகிச்­சைக்­கான முழுக் கட்­ட­ணத்­தை­யும் துணைக் காப்­பு­றுதி மூலம் செலுத்த முடிந்­தது. ஆயி­னும், 2018 மார்ச் 8ஆம் தேதிக்­குப்­பின் துணைக் காப்­பு­றுதி வாங்­கி­யோர், சிகிச்­சைக்­கான கட்­ட­ணத்­தில் ஐந்து விழுக்­காட்­டைச் செலுத்த வேண்­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வு­கள் அதி­க­ரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக துணைக் காப்­பு­று­தி­களில் சுகா­தார அமைச்சு மாற்­றம் செய்­தது. துணைக் காப்­பு­று­தி­கள் மூலம் முழுத் தொகை­யை­யும் செலுத்­தி­யோர்க்­கான சிகிச்­சைக் கட்­ட­ணம், துணைக் காப்­பு­றுதி பெறாத மற்ற நோயா­ளி­க­ளின் கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும் 60% கூடு­த­லாக இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

55 புற்றுநோய் மருந்துகளுக்கு மானியம்

சிங்­கப்­பூ­ரில் மானி­யம் பெறும் மருந்து­க­ளுக்­கான பட்­டி­ய­லில் மேலும் 55 புற்­று­நோய் மருந்­து­கள் சேர்க்­கப்­ப­ட­வுள்­ளன.

அடிப்­படை மருந்­துப் பட்­டி­யல், மருத்­துவ உதவி நிதி (எம்­ஏ­எஃப்) பட்­டி­ய­லில் அவை சேர்க்­கப்­பட இருப்­ப­தன்­மூ­லம் 150 புற்­று­நோய்ச் சிகிச்­சை­க­ளுக்­கான நிதி­யு­தவி அதி­க­ரிக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

எம்­ஏ­எஃப் திட்­டத்­தின்­கீழ் நிதி­யு­தவி பெறு­வ­தற்­கான தகு­தி­வி­தி­கள் அடுத்த ஆண்டு செப்­டம்­ப­ரில் இருந்து விரி­வு­ப­டுத்­தப்­படும்.

இத­னை­ய­டுத்து, குடும்­பத்­தில் மாதாந்­திர தனி­ந­பர் சரா­சரி வரு­மா­ன­மாக $6,500 வரை ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர்­கள், புற்­று­நோய்க்­கும் மற்ற நோய்­க­ளுக்­கும் மருந்து மானி­யம் பெறத் தகு­தி­பெ­று­வர்.

இப்­போது அந்த வரு­மான வரம்பு $2,800ஆக இருக்­கிறது.

மெடி­ஷீல்டு லைஃப் கோரிக்கை வரம்­பு­களில் செய்­யப்­பட்­டுள்ள மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப, புற்­று­நோய் மருந்து­க­ளுக்­காக மெடி­சேவ் கணக்­கில் இருந்து எடுக்­கக்­கூ­டிய தொகை­யின் வரம்­பும் மாற்­றி­ய­மைக்­கப்­படும் என்­றும் அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

இப்­போ­தைக்கு, அனைத்­துப் புற்­று­நோய் மருந்­துச் சிகிச்­சை­களுக்­கும் இரத்­தப் பரி­சோ­தனை போன்ற அது சார்ந்த சேவை­க­ளுக்­கும் ஒரு­வர் மாதத்­திற்கு $1,200 வரை எடுக்க இய­லும். இந்­நி­லை­யில், இந்த மாற்­றங்­கள் அடுத்த ஆண்டு நடப்­பிற்கு வந்­த­பின், பயன்­ப­டுத்­தும் மருந்­தைப் பொறுத்து, சில­ருக்கு அந்த வரம்பு $600ஆகக் குறை­யும்.