தடுப்பூசியால் கடும் பக்கவிளைவு: 144 பேர்க்கு $782,000 நிதியுதவி

தடுப்பூசியால் கடும் பக்கவிளைவு: 144 பேர்க்கு $782,000 நிதியுதவி

2 mins read
4b27aa59-ad02-48e4-b4c0-a9393d140dc8
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட பிறகு, கடும் பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­பட்ட நோயா­ளி­கள் இரு­வர்க்குத் தலா $225,000 நிதி­யு­தவி வழங்கியுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இத்­த­கைய சூழ­லில் வழங்­கப்­பட்ட தொகை­யில் இதுவே ஆக அதி­கம் என்று கூறப்­பட்­டது.

கொவிட்-19 தடுப்­பூ­சி­யில் முதல் தவணையைப் போட்­டுக்­கொண்ட 16 வயது இளை­யர் ஒரு­வ­ர்க்கு மார­டைப்பு ஏற்­பட்­டது. அவர் தற்­போது உள்­நோ­யாளியாக சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

நிதி­யு­தவி பெற்ற மற்­றொ­ரு­வர் குறித்த விவ­ரங்­களை அமைச்­சின் பேச்­சா­ளர் குறிப்­பி­ட­வில்லை.

"$225,000 என்ற முத­லாம் அடுக்கு வழங்­கு­தொகைக்கு இது­வரை இரண்டு பேர் தகு­தி­பெற்­றுள்­ள­னர்," என்று அந்­தப் பேச்­சா­ளர் 'தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி­த­ழிடம் தெரி­வித்தார்.

இவ்­வாண்டு முற்­பா­தி­யில் தடுப்­பூசி காயங்­க­ளுக்­கான நிதி­யு­த­வித் திட்­டம் (விஐ­எ­ஃப்­ஏபி) தொடங்­கப்­பட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னர், மருத்­துவ ரீதி­யா­கக் குறிப்­பி­டத்­தக்க கடு­மை­யான பக்­க­விளைவு­கள் ஏற்­ப­டு­வோர்க்கு இந்த உத­வித்­தொகை வழங்­கப்­படும். கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வோர்க்கு மிகுந்த மன அமை­தியை அளிப்­ப­தற்­காக இத்­திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதற்­கி­டையே, 'விஐ­எ­ஃப்­ஏபி' திட்­டத்­தின்­கீழ் விண்­ணப்­பித்தோரில் தகு­தி­யுடைய 144 பேர்க்கு மொத்­தம் $782,000 வழங்­கப்­பட்­டுள்­ளது அல்­லது வழங்­கப்­படவுள்ளது என்று அமைச்சு தெரி­வித்­தது.

'விஐ­எ­ஃப்­ஏபி' திட்­டம் மூலம் வழங்­கப்­படும் உத­வித் தொகை, முன்­னரே நிர்­ண­யிக்­கப்­பட்­டது என்­றும் பக்­க­வி­ளை­வின் கடுமையைப் பொறுத்து அது முடி­வு­செய்­யப்­படும் என்­றும் அமைச்சு தனது இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­தப் பக்­க­வி­ளை­வு­கள் மூன்று பிரி­வு­க­ளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

முதல் பிரி­வின்கீழ், தடுப்­பூ­சி­யால் மர­ணமோ நிரந்­த­ர­மாக கடும் உடற்­கு­றை­பாடோ ஏற்பட்டால் ஒருமுறை மட்டும் $225,000 நிதியுதவி வழங்­கப்­படும்.

இரண்­டா­வது பிரிவின்கீழ், மருத்­து­வ­ம­னை­யின் உயர்நிலை சிகிச்சைப் பிரி­விலோ தீவிர சிகிச்­சைப் பிரி­விலோ சேர்க்­கப்­பட்டு, படிப்­ப­டி­யாக குண­ம­டை­யும் சாத்­தி­யம் உள்ளோர்க்கு $10,000 வழங்கப்படும்.

மூன்­றா­வது பிரி­வின்கீழ் வருவோர், மருத்­து­வ­ம­னை­யின் உள்­நோ­யா­ளிச் சேவை­யை­யும் மருத்­துவ சிகிச்­சை­யை­யும் நாடி, குணம் அடை­யும் சாத்­தி­யம் உள்ள நிலை­யில் $2,000 பெறு­வர்.