மேலும் 56 பேர் தொற்றால் பாதிப்பு

மேலும் 56 பேர் தொற்றால் பாதிப்பு

1 mins read
0c604b04-846e-41f6-b5a0-c24d7f51d932
-

சமூகத்தில் மேலும் 52 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. அவர்களில்

35 பேர் முன்னர் தொற்று கண்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப் பட்டுவிட்டனர். தொடர்பிருந்த வகையில் மேலும் மூவர்க்குக் கிருமித்தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. தொடர்பற்ற வகையில் 14 பேரைக் கிருமி தொற்றிவிட்டது. சமூகத்தில் பாதிக்கப்பட்டோரில், இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, 70 வயதிற்கு மேற்பட்ட ஒருவரும் அடங்குவார். வெளி நாட்டில் இருந்து வந்தோரில் நால்வரைக் கிருமி தொற்றி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஒட்டுமொத்தத்தில், நேற்று புதிதாக 56 பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப் பட்டது. இதனையடுத்து, சிங்கப்பூரில் கிருமி பாதிப்பு 66,281ஆக உயர்ந்துவிட்டது.