26ஆம் தேதி முதல் பேரங்காடிகளில் இலவச முகக்கவசங்கள் விநியோகம்

26ஆம் தேதி முதல் பேரங்காடிகளில் இலவச முகக்கவசங்கள் விநியோகம்

2 mins read
16a3ce02-fbe4-4798-a218-a55d085d2cb3
-

இம்­மா­தம் 26ஆம் தேதி­ முதல், 131 பேரங்­கா­டி­களில் இருந்து ஒவ்­வொரு குடும்­ப­மும் 50 மருத்­து­வத் தர அறுவை சிகிச்சை முகக்­க­வ­சங்­க­ளை­யும் 25 என்95 முகக்­க­வ­சங்­க­ளை­யும் இல­வ­ச­மா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் ஐந்­தா­வது முகக்­க­வச விநி­யோக நட­வ­டிக்கை இது.

இல­வச முகக்­க­வச விநி­யோ­கம் குறித்து தெமா­செக் தலைமை நிர்­வாகி திரு­வாட்டி ஹோ சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக அறி­வித்­தார். செப்­டம்­பர் 26ஆம் தேதி­வரை இல­வச முகக்­கவச விநி­யோக நட­வ­டிக்கை இடம்­பெ­றும்.

இல­வச முகக்­க­வச விநி­யோ­கம் தொடர்­பில் பெரிய அள­வி­லான பேரங்­கா­டி­க­ளு­ட­னும் குறிப்­பிட்ட சில கேப்­பிட்­ட­லேண்ட் கடைத்­தொகு­தி­க­ளு­ட­னும் தெமா­செக் அற­நி­று­வ­னம் இணைந்து பணி­ ஆற்றி வரு­கிறது.

ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ், கோல்டு ஸ்டோ­ரேஜ், பிரைம், ஜயன்ட் போன்ற பேரங்­கா­டிக் குழு­மங்­கள் அவற்­றில் அடங்­கும்.

முகக்­க­வ­சங்­க­ளைப் பெற, குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளது எஸ்பி குழும மின்­கட்­டண ரசீதை எடுத்துச் செல்ல வேண்­டும். அது, தாள் அல்லது மின்­னணு ரசீ­தாக இருக்­க­லாம்.

இந்த விநி­யோக நட­வ­டிக்­கை­யில் மருந்­த­கங்­கள் இடம்­பெறா என்று திரு­வாட்டி ஹோ சிங் தெரி­வித்­துள்­ளார். அதிக எண்­ணிக்­கை­யி­லான முகக்­க­வ­சங்­கள் வழங்­கப்­படு­வ­தால், அவற்றை இருப்­பில் வைக்­கும் அள­விற்கு மருந்­த­கங்­களில் இட­மி­ராது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அதி­க­மான இடம் தேவைப்­படு­வ­தால் இந்த விநி­யோக நட­வடிக்­கை­யில் எல்­லாப் பேரங்­கா­டி­களும் பங்­கேற்­காது," என்­றார் அவர்.

பிளாஸ்­டிக் கழி­வைக் குறைக்­கும் வித­மாக, இல­வச முகக்­க­வ­சங்­க­ளைப் பெற சொந்­த­மாக பையை எடுத்­துச் செல்ல குடி­யிருப்­பா­ளர்­கள் ஊக்­கு­விக்­கப்­படு­கின்­றனர்.

அத்­து­டன், கையி­ருப்பு மிகுதி­யாக இருப்­ப­தால் இல­வச முகக்­கவச விநி­யோக நட­வ­டிக்­கை­யின் முதல் மூன்று நாள்­க­ளி­லேயே அவற்­றைப் பெறும் வகை­யில் பொது­மக்­கள் விரைய வேண்­டாம் என்று திரு­வாட்டி ஹோ சிங் தமது ஃபேஸ்புக் பதி­வின் வழி­யா­கக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.