உணவைச் சொந்தமாக வீட்டில் தயார்செய்து விற்கும் வர்த்தகர்கள் சிலர் அதன் தொடர்பிலான விதிமுறைகளை வரவேற்கின்றனர். அண்மையில் 'தி பீச்சி ஷுகர்மேக்கர்' தயார்செய்த உணவை உட்கொண்ட 15 பேருக்குக் குடல் அழற்சி ஏற்பட்டது.
அவர்களில் ஒன்பது பேரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டியிருந்தது.
அதனைத் தொடர்ந்து வீட்டு உணவு வர்த்தகத்தில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதம் எழுந்தது.
உணவைச் சுத்தமாக வைத்திருப்பதன் தொடர்பில் தான் வரைந்துள்ள ஆலோசனைகளைப் பின்பற்றினால் வீட்டில் உணவைத் தயார்செய்து விற்க உரிமம் தேவையில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் சூடுபிடித்த இந்த வர்த்தகம் மேலும் வளர்ச்சியடைய விதிமுறைகள் இருப்பது நல்லது எனச் சிலர் கூறுகின்றனர்.
வேறு சில வர்த்தகர்கள் விதிமுறைகளை விரும்பவில்லை.

