மூதாட்டியைத் தள்ளிவிட்ட பணிப்பெண்ணுக்கு சிறை

மூதாட்டியைத் தள்ளிவிட்ட பணிப்பெண்ணுக்கு சிறை

1 mins read
fc9c30d7-f771-439a-8a8c-b2665ab401b2
-
Google News Preferred Icon

பணிப்பெண் தள்ளிவிட்டதால் 85 வயது மூதாட்டியின் இடை எலும்பு முறிந்தது. குற்றவாளியான 41 வயது பணிப்பெண் மூதாட்டியின் குடும்பத்திற்கு சுமார் ஆறு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கியு கியு அய் என்ற அவருக்கு இரண்டு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வீட்டு வேலை­க­ளைச் செய்வது, மூதாட்­டி­யைக் கவ­னித்­துக்­கொள்­வது ஆகிய பொறுப்­பு­கள் மியன்­மா­ரைச் சேர்ந்த கியு கியு அய்க்கு இருந்­தன.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதாட்டி வீட்­டில் சமை­ய­ல­றைக்கு மெது­வாக நடந்து சென்­றி­ருக்­கிறார். கியு கியு அய் மூதாட்­டியை வேக­மாக நடக்­கச் சொன்­னார். அதற்கு பிறகு கோபமடைந்த அவர் மூதாட்­டி­யைத் தள்­ளி­விட்­டார். மருத்­து­வ­மனை­யில் மூதாட்­டி­யின் இடை எலும்பு முறிந்­தது தெரி­ய­வந்­தது.