பணிப்பெண்ணை துன்புறுத்தியதற்கு சிறை

பணிப்பெண்ணை துன்புறுத்தியதற்கு சிறை

1 mins read
59573945-5fc0-4bfb-9120-0ff6087959c6
-

கழி­வ­றை­யின் கதவை மூடா­மல் குளிக்­கு­மா­றும் சன்­னல்­க­ளைத் திறந்­து­வைத்­த­படி ஆடை­களை மாற்­றிக்­கொள்­ளு­மா­றும் தனது இந்தோ­னீ­சிய பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­திய இல்­லத்­த­ர­சிக்கு 15 மாதம் இரண்டு வாரங்­க­ள் சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட பணிப்­பெண்ணான திரு­வாட்டி மாயாங் சாரிக்கு 2,500 வெள்ளி இழப்­பீட்­டுத் தொகையை வழங்­கு­மா­றும் குற்­ற­வா­ளி­யான 33 வயது ரொஸ்­டி­யானா அப்துல் ரஹிமிற்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

தொகை­யைத் தர­மு­டி­யா­விட்­டால், இரட்­டைக் குழந்­தை­க­ளுக்­குத் தாயான ரொஸ்­டி­யானா கூடு­த­லாக 11 நாட்­கள் சிறை­யில் இருக்­க­வேண்­டும். ரொஸ்டியானா மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் ஆறு நிரூபிக்கப்பட்டன. திருவாட்டி மாயாங் சாரியின் வயது நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.