அதிக ஊழியர்களை அலுவலகத்துக்கு மீண்டும் அழைக்க அனுமதி.

அதிக ஊழியர்களை அலுவலகத்துக்கு மீண்டும் அழைக்க அனுமதி.

1 mins read
4edcb5af-bbed-46be-8aa8-becb44523c2a
-
Google News Preferred Icon

நாளை முதல் சிங்கப்பூர், சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அதிக ஊழியர்களை அலுவலகத்திற்கு மீண்டும் வரவழைக்க அனுமதி தந்துள்ளது.

இருந்தபோதும், கிருமிப்பரவலுக்குப் பிந்திய உலகில் வீட்டில் வேலை பார்க்கும் முறையும் வேலையிடத்தில் வேலை பார்க்கும் முறையும் மாறி மாறி இருப்பது சாதாரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"கொவிட்-19க்குப் பிந்திய புதிய வழக்கநிலையில் அதிக நீக்குப்போக்கு கொண்ட வேலை முறையை ஆதரிக்க பொதுச்சேவை முற்படுகிறது," என்று பொதுச்சேவைத் துறை பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

" இது அதிகாரிகளின் தேவைகளை நிறைவு செய்யும். அதே வேளையில் வேலையிடங்களின் தேவைகளையும் சமன் செய்யும்,"

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறைக்கு முதன்மை கொடுக்கப்படாது என்று அமைச்சர்நிலை பணிக்குழு அறிவித்தது.