முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது நோயாளி உயிர் இழப்பு

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது நோயாளி உயிர் இழப்பு

1 mins read
022e6789-91b4-45fb-b5d5-4b75cfb1e4bc
-
Google News Preferred Icon

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது சிறுநீரக நோயாளி, கொவிட்-19 தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் கொவிட்-19 தொடர்பான உடல்நலச் சிக்கல்களால் உயிரிழந்தது இதுவே முதல் முறை.

ஜூலை 29ஆம் தேதியன்று நோய்த்தொற்றுக்கான அறிகுறி அந்த ஆடவரில் தென்பட்டது. பின்னர், அவரிடம் கொவிட் 19 இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று மூச்சுத்திணறல், மயக்கம் ஆகியவை அவருக்கு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இரண்டு தடுப்பூசிகளுமே போடப்பட்டுள்ளன. ஆயினும் மிக மூத்த வயதானவராக இருந்த அவருக்கு, நாட்பட்ட சிறு நீரக நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருந்ததாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதுவரை, ஆக மொத்தம் கொவிட் 19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட உடல் சிக்கல் உபாதைகளால் 45 பேர் உயிரிழந்துவிட்டதாககக் கூறப்படு கிறது.