மனநலம் தொடர்பில் பெற்றோரின் பங்கு

மனநலம் தொடர்பில் பெற்றோரின் பங்கு

1 mins read
9fd37ec9-ba5a-46a8-bb64-7cd57be84982
-

பிள்­ளை­கள் தங்­க­ளின் மன­ந­ல­னைப் பேணு­வ­தில் பெற்­றோ­ரின் பங்கு மிக முக்­கி­யம். பிள்­ளைக்கு உணர்­வு­ரீ­தி­யா­கப் பிரச்­சினை ஏற்­படும்­போது அதை முத­லில் கவ­னிப்­ப­வர்­கள் பெற்­றோரே.

இந்­நி­லை­யில், தங்­க­ளின் பிள்­ளை­கள் மன­நல ரீதி­யாக ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தைப் பெற்­றோர் எவ்­வாறு உறு­தி­செய்­ய­லாம் என்­ப­தற்கு சில வழி­மு­றை­கள் உள்­ளன. அத்­து­டன் மன­ந­லம் தொடர்­பான தவ­றான எண்­ணங்­க­ளை­யும் பெற்­றோ­ரால் களை­ய­மு­டி­யும்.

பெற்­றோர் தங்­க­ளது பிள்­ளை­யின் மன­ந­லம் தொடர்­பில் தாங்­களே முன்­வந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். ஆசி­ரி­யர்­க­ளின் உத­வி­யையோ இணை­யத்­த­ளங்­களையோ நாடா­மல், வீட்­டில் ஆரோக்­கி­ய­மான ஒரு சூழ­லைப் பெற்­றோர்­கள் உரு­வாக்­கித் தரு­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும்.

பெற்­றோ­ரும் அவர்­க­ளுக்கு அழுத்­தம் தரக்­கூ­டிய விவ­கா­ரங்­கள் குறித்­துப் பிள்­ளை­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ள­லாம். இத­னால் அவர்­க­ளுக்கு இடையே ஒரு புரிந்­து­ணர்வு ஏற்­படும்.

சில சம­யங்­களில் நாமும் பாதிக்­கப்­ப­டு­வோம் என்­ப­தைப் பிள்­ளை­கள் உண­ரும்­போது அவர்­க­ளின் பாரம் சற்று குறைந்­தது போல் இருக்­கும். பிள்ளைக்குப் பிடித்தமான நடவடிக்கையில் அவரோடு சேர்ந்து ஈடுபடுவதும் ஓர் உத்தியாகும்.