'கேரோசெல்' விற்பனைத் தளத்தில் சினோவேக் தடுப்பூசி தொடர்பான விளம்பரங்கள்

'கேரோசெல்' விற்பனைத் தளத்தில் சினோவேக் தடுப்பூசி தொடர்பான விளம்பரங்கள்

1 mins read
5d35b5f9-ea69-487a-817b-613e00a0618d
'சினோவேக்' தடுப்பூசிக்கான முன்பதிவை விளம்பரப்படுத்தும் பதிவுகள். கேரோசெல் தளத்தில் எடுக்கப்பட்ட படம் -

அர­சாங்­கத்­தின் 200,000 சினோ­வேக் தடுப்­பூ­சி­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­படும் நிலை குறித்­துச் செய்தி பரவ, பய­னா­ளர்­க­ளுக்­கான 'கேரோ­செல்' விற்­ப­னைத் தளத்­தில் சினோ­வேக் தொடர்­பான விளம்­ப­ரங்­கள் தோன்­றத் தொடங்­கி­யுள்­ளன.

சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­காக ஒரு­வர் ஏற்­கெ­னவே முன்­ப­திவு செய்­து­விட்ட நிலை­யில், அவ­ரி­ட­மி­ருந்து அதை வாங்­கிக்­கொள்ள சிலர் பணம் தரத் தயா­ராக உள்­ள­னர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் இத்­த­கைய விளம்­ப­ரங்­க­ளைப் பதி­விட்ட நால்­வர், $50 முதல் $80 வரை தரத் தயா­ராக இருந்­த­தாக 'தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நேற்று கண்­ட­றிந்­தது.

இவ்­வாறு தடுப்­பூ­சிக்­கான முன்­ப­திவை ஒரு­வர் வாங்­கிக்­கொள்­வது சட்­ட­பூர்­வ­மா­னதா என்­பது குறித்து சுகா­தார அமைச்சு மற்­றும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் நாளி­தழ் கேட்­டும் உள்­ளது.

சிறப்­புப் பயன்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் 31 தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­கள் 'சினோ­வேக்' தடுப்­பூ­சி­யை மக்களுக்குப் போடு­வ­தற்கு அமைச்சு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இதற்­கி­டையே இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று சினோ­வேக் தடுப்­பூ­சிக்­கான கையி­ருப்பு குறைந்­து­வ­ரு­வ­தாக அமைச்சு அறி­வித்­தது.

இதற்கிடையே இன்­னும் நான்கு முதல் ஆறு வாரங்­களில் சினோ­வேக் தடுப்­பூ­சி­கள் சிங்­கப்­பூரை வந்­த­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.