$40 மி. நிரப்புத்தொகை

$40 மி. நிரப்புத்தொகை

2 mins read
b3f95439-1b01-4adb-9783-188545007b07
-

70,000 மத்திய சேம நிதி உறுப்பினர்களின் ஓய்வுக்கால கணக்கு

அடுத்த ஆண்டு ஜன­வ­ரி­யில் 70,000 மத்­திய சேம­நிதி உறுப்­பி­னர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் சுமார் $40 மில்­லி­யன் நிரப்­புத்­தொகை வழங்­கப்­படும்.

வெள்­ளிக்கு வெள்ளி அடிப்­ப­டை­யில் வழங்­கப்­பட இருக்­கும் இத்­தொகை, இவ்­வாண்­டின் முதல் பகு­தி­யில் ஓய்­வுக்­கால கணக்­கில் செலுத்­தப்­பட்ட ரொக்க பண நிரப்­பு­த­லுக்­கா­க­னது.

இந்த நிரப்­புத்­தொகை மாதாந்­தர ஓய்­வுக்­கால வழங்­கு­தொ­கையை அதி­க­ரிக்­கும் என மத்­திய சேம­நிதி கழ­கம் தெரி­வித்­தது.

தற்­போது நிடப்­பில் இருக்­கும் குறைந்­த­பட்ச ஓய்­வுக்­கால தொகையை அடைய சிர­மப்­படும் மூத்­தோ­ருக்கு உத­வு­வ­தற்கு இவ்­வாண்டு தொடக்­கத்­தில், வெள்­ளிக்கு வெள்ளி அடிப்­ப­டை­யில், மத்­திய சேம­நிதி ஓய்­வுக்­கா­லக் கணக்­கில் தொகை நிரப்­பும் திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

இத்­திட்­டத்­தின்கீழ் இந்த மானி­யம் வழங்­கப்­படும்.

தகுதி பெறும் உறுப்­பி­னர்­கள் செய்­யும் ரொக்­கப் பண நிரப்­பு­தல் அர­சாங்­கத்­தால் வெள்­ளிக்கு வெள்ளி ஈடு­செய்­யப்­படும்.

ஆண்­டிற்கு $600 வரம்பு கொண்ட இந்த ரொக்­கப் பண நிரப்­பு­தலை யார் வேண்­டு­மா­னா­லும் தகுதி பெறும் உறுப்­பி­னர்­க­ளுக்­கா­கச் செல்­லுத்­த­லாம்.

இத்­திட்­டம் தொடக்­கத்­திற்கு ஐந்­தாண்டு காலம் (2025 வரை) நடப்­பில் இருக்­கும். தகுதி பெறும் உறுப்­பி­னர்­கள் ஜன­வரி மாதத்­தில் மின்­னஞ்­சல், குறுஞ்­செய்தி அல்­லது அஞ்­சல் முலம் தக­வல் பெறு­வர்.

440,000 பேர் இத்­திட்­டத்­திற்­குத் தகுதி பெற்­றுள்­ள­னர் என்­றும் இதிட்­டத்­திற்கு விண்­ண­பம் தேவை­யில்லை என்­றும் மத்­திய சேம­நிதி கழ­கம் கூறி­யது.

இந்­தத் திட்­டம் அப்­போது நிதி­ அ­மைச்­ச­ராக இருந்த ஹெங் சுவீ கியட்­டால் சென்ற ஆண்டு வரவு செல­வுத் திட்­ட­தில் அறி­விக்­கப்­பட்­டது.

இது ஓய்­வுக்­கா­லத்­தில் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய சிர­மப்­படும் முதி­யோர்­க­ளுக்­குக் குடும்­பத்­தி­னர் உத­வு­வதை ஊக்­கு­விக்­கும் என அவர் குறிப்­பிட்­டார்.