கனத்த மழையால் கிட்டத்தட்ட 18 மீட்டர் உயரமுள்ள மரம் நேற்று முன்தினம் பிற்பகல் சுமார் 12.20 மணிக்கு விழுந்தது. எண் 134 எமரல்ட் ஹில் சாலையில் விழுந்த இந்த மரம் பல டன் எடை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
மரம் விழுந்ததில் அங்கிருந்த வேன் தரைமட்டத்திற்கு நசுங்கியதை சமூக ஊடகங்களில் பரவிவரும் புகைப்படங்களின்மூலம் காண முடிந்தது.
மாலை 4 மணிக்குள் விழுந்த மரம் அகற்றப்பட்டது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை என்றும் நம்பப்படுகிறது.

